Asianet News TamilAsianet News Tamil

திருமணம் முடிந்து குடும்பத்தில் புதிதாக சேரும் உறுப்பினர் - ரேஷன் கார்டில் பெயரை இணைப்பது எப்படி? முழு விவரம்!

இந்திய அரசை பொருத்தவரை, அரசு வழங்கும் அனைத்து சலுகைகளை பெறுவதற்கும், குறிப்பாக நியாய விலை கடைகளில், மலிவு விலையில் பொருட்களை பெறவும், அவசியமாக இருப்பது தான் ஒருவருடைய ரேஷன் அட்டை.

How to Add or Remove Members in Ration Card Full Details
Author
First Published Jul 31, 2023, 4:25 PM IST

ரேஷன் அட்டை - ஆதார் 

தற்போது தங்கள் ரேஷன் கார்டுடன், ஆதார் இணைப்பது கட்டாயம் ஆகியுள்ள நிலையில் வருகிற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் eKYC செய்திருக்கவேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த பல ஆண்டுகளாகவே அரசு அதற்கான பல முன்னெடுப்புகளை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் புதிதாக தங்கள் குடும்பத்தில் இணையும் நபர்களின் பெயர்களை எப்படி சேர்ப்பது அல்லது திருமணமாகி தனிக் குடுத்தனம் செல்லும் தம்பதியர்கள் என்ன செய்யவேண்டும் என்பது குறித்த பல தகவல்களை இந்த பதிவில் காணலாம். 

மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு; அதிக குறியீடுகள் பெற்று தமிழகம் தொடர்ந்து முதல் இடம்

ரேஷன் கார்டு பெயர் சேர்த்தால் 

தமிழக அரசின் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnpds.gov.in என்ற இணையதளத்தின் வழியாகத்தான் அனைத்து விஷயங்களையும் நாம் செய்யவேண்டும். இந்த இணையதளத்திற்கு சென்றால், அதில் உறுப்பினரை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்பத் தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்க என்று பல விஷயங்களுக்கான லிங்க் கொடுக்கப்பட்டிருக்கும், அதில் உங்களுடைய ரேஷன் அட்டையுடன் பதிவு செய்யப்பட்ட 10 டிஜிட் அலைபேசி எண் கொடுத்து நீங்கள் உள்ளே சென்று வேண்டிய சேவைகளை பெறலாம். 

தனி ரேஷன் கார்டு 

தனிக்குடும்பம் செல்லும் கணவன் மற்றும் மனைவி, ஏற்கனவே அவர்கள் பெயர் இடம்பெற்றுள்ள ரேஷன் கார்டில் இருந்து தங்கள் பெயரை நீக்கிய பின்னரே தனியாக ரேஷன் அட்டை பெறமுடியும். தற்போது புதிதாக ரேஷன் அட்டை பெற ஆதார் முக்கியம். 

மூத்த காங்கிரஸ் தலைவர் வக்கோம் புருஷோத்தமன் காலமானார்!

Follow Us:
Download App:
  • android
  • ios