பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிவாரணம் பெறுவது எப்படி?

பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் சேதமடைந்த பயிர்களின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் மற்றும் வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

How can farmers affected by Cyclone Fengal get relief? sgb

பெஞ்சல் புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குத் தமிழக அரசு நிவாரண உதவிகளை அறிவித்துள்ளது. அதன்படி புயல் மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு விவசாயிகள் அரசின் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும்.

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மழையினால் பாதிக்கப்பட்ட மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.8.500/- இழப்பீடு வழங்கப்படும். 33 விழுக்காடு மற்றும் அதற்கு மேலாக பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இந்த நிவாரணத் தொகை கிடைக்கும்.

எருது உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்திருந்தால், அதற்கான நிவாரணத் தொகையாக ரூ.37,500 வரை கிடைக்கும். ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்துபோயிருந்தால் தலா ரூ.4000 மற்றும் கோழிகள் இறப்புக்கு தலா ரூ.100 நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!!

இந்தத் தொகையைப் பெற பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் சேதமடைந்த பயிர்களின் புகைப்படம், ஆதார் அட்டை நகல், சிட்டா நகல் மற்றும் வங்கி பாஸ்புக் நகல் ஆகியவற்றையும் இணைக்க வேண்டும்.

பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தொடர்புடைய இணைப்புகளுடன் சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை உதவி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து நிவாரண உதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்படும்.

Fengel relief

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு ரூ.2,000:

கடுமையான மழைப்பொழிவினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் தலா ரூ. 2,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மழை வெள்ளத்தால் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழத்தவர்களுக்கு புதிய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார். பாடப் புத்தகங்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு புதிய பாட புத்தகங்களும் நோட்டுகளும் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

புஷ்பா 2 படத்தால் பங்குச் சந்தையில் சில நொடிகளில் கொட்டிய 426 கோடி!! காரணம் இதுதான்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios