Diwali: தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை... அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..
புதுச்சேரியில் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அன்று உள்ளூர் விடுமுறை வழங்கப்படுமா என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுக்குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.
நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு லட்சகணக்கான மக்கள் படையெடுத்துள்ளன. ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை கட்டுபடுத்த அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் தீபாவளிக்கு அடுத்த அக்.25 ஆம் தேதி மக்கள் ஊர் திரும்பும் வகையில் உள்ளூர் விடுமுறை வழங்க வேண்டும். அரசு ஊழியர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள் தீபாவளி மறூநாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க:திடீரென வெடித்த சிலிண்டர்..! இரண்டாக உடைந்த கார்...! துடி துடித்து ஒருவர் பலி
முன்னதாக தீபாவளிக்கு மறுநாள் 25 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. எனவே தமிழகத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார்.
வரும் 25 ஆம் தேதி விடுமுறை விட வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுக்குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க:தமிழக மாணவர்களை விரட்டி விரட்டி தாக்கிய கொடூரம்..! திருப்பதி டோல்கேட்டில் மர்ம நபர்கள் தாக்கியதால் பரபரப்பு