ஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி அளித்த சென்னை நகைக்கடை உரிமையாளர்! ரூ.1.20 கோடியில் பைக், கார் தீபாவளிப் பரிசு

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர், தனது கடை ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ரூ.1.20 கோடியில் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பரிசாக வழங்கி இன்பஅதிர்ச்சி அளித்துள்ளார்.

On Diwali, the owner of a jewellery store in Chennai gives his employees vehicles and bikes.

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர், தனது கடை ஊழியர்களுக்கு தீபாவளிப் பரிசாக ரூ.1.20 கோடியில் கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை பரிசாக வழங்கி இன்பஅதிர்ச்சி அளித்துள்ளார்.

சென்னையில் உள்ள சலானி ஜூவல்லரி மார்ட் நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால் சாயந்தி என்பவர்தான் தனது கடைஊழியர்களுக்கு இன்பஅதிர்ச்சி அளித்துள்ளார். தனது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 10 பேருக்கு காரும், 20 பேருக்கு மோட்டார் சைக்கிளும் பரிசாக ஜெயந்தி லால் சாயந்தி வழங்கியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் தேர்தல் : கர்நாடகாவில் இருக்கும் ராகுல் காந்தி எப்படி வாக்களிப்பார்? சர்ச்சையில் காங்கிரஸ்!

இன்பம் நிறைந்த இந்த நிகழ்ச்சி குறித்து சாயந்தி ஜூவல்லரி மார்ட் நகைக்கடை உரிமையாளர் ஜெயந்தி லால் சலானி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் “ என் வாழ்க்கையின் கடினமான காலகட்டத்திலும், உயர்விலும் என்னுடைய ஊழியர்கள் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். எனக்கு என்னுடைய ஊழியர்கள் என்பவர்கள் 2வது குடும்பம். 

என் ஊழியர்களுக்கு நான் வழங்கிய இந்த தீபாவளிப்பரிசால் அவர்கள் இன்னும் ஊக்கமடைவார்கள், அவர்களுக்கு நிச்சயமாக சிறப்பான நாளாக இருக்கும். எனக்காக கடினமாக உழைத்து நான் லாபம் ஈட்டுவதற்கு உதவியுள்ளார்கள். இவர்கள் ஊழியர்கள் மட்டுமல்ல என் குடும்பத்தில் ஒருவர். 

தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை… துணை போகிறது அரசு… அதிமுக நிர்வாகி கண்டனம்!!

ஆதலால், என் குடும்ப உறுப்பினர்களுக்கு தீபாவளிப்பரிசு வழங்குவதைப் போல் என் ஊழியர்களுக்கும் வழங்கினேன். இந்த நிகழ்வுக்குப்பின் என் முழுமனதும் நிறைவாக இருக்கிறது. ஒவ்வொரு கடை உரிமையாளரும் தனது ஊழியரை மதித்து, அவர்களுக்கு ஏதாவது பரிசு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சலானி ஜூவல்லரி மார்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் “ சலானி, அனைவருடனும் இணக்கமான தொடர்புடன் உணர்வுப்பூர்வமாகஇருப்பவர், நிறுவனத்தையும் ஊழியர்களையும் நல்ல முறையில் வைத்திருக்கும் அவருக்காக  பணி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

 

எங்கள் நிறுவனத்துக்குள், எங்களுக்குள் சிறப்பான மரபணு  இயங்குகிறது, அது நிபந்தனையற்ற அன்பு, அது வாடிக்கையாளர்களிடமோ அல்லது எங்கள் ஊழியர்களிடமோ இருக்கலாம், நிபந்தனையின்றி அன்பு செலுத்துகிறோம் என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். நாமாக இருக்க உதவிய எங்களுக்கும், அவருக்கும் நன்றி! எனத் தெரிவித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios