தனியார் பள்ளிகளில் கட்டண கொள்ளை… துணை போகிறது அரசு… அதிமுக நிர்வாகி கண்டனம்!!

தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளைக்கு அரசு துணை போவது சரி இல்லை என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

its not right for the govt to support fee theft in private schools says anbazagan

தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளைக்கு அரசு துணை போவது சரி இல்லை என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஆட்சியின் இயலாமையை மூடிமறைக்கவும், மக்களை திசை திருப்பும் வகையில் ஜாதி மற்றும், மதத்தை கையில் எடுத்து வருவதாகவும், மேலும் நீர்த்துப்போன இந்தி திணிப்பு என்ற கோஷத்தை முன்வைத்து இந்தி எதிர்ப்பு என்ற போராட்டத்தை நடத்தியிருப்பது நாடகத்தனமான செயல். மத்தியில் திமுக கூட்டணியோடு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாடு முழுவதும் இந்தி மொழியை கொண்டு செல்லவும், இணைப்பு மொழியாக இந்தியை அனைத்து மாநிலங்களிலும் முழுமையாக கொண்டு வர பாராளுமன்றத்தில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இதையும் படிங்க: வெளியானது தலைசிறந்த கண் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் பட்டியல்… தமிழக மருத்துவர்கள் இடம்பிடித்து அசத்தல்!!

அதனடிப்படையில் தற்போது இந்தியை மத்திய அரசு கட்டாயமாக்கி வருகிறது. தமிழகத்திலும் புதுச்சேரியிலும் இன்று வரை தேசிய மருத்துவ கவுன்சில் ஆணையத்தின் படி அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் 50 சதவீத இடத்தினை பெறவும், அதற்கான கட்டணத்தையும் நிர்டயிக்கவும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த ஆண்டு அரசின் இடஒதுக்கீடாக எத்தனை இடங்கள் என அறிவிக்கப்படவில்லை. மருத்துவ கல்வியில் கல்வி கட்டணம் சம்பந்தமாக அமைக்கப்பட்ட கட்டண நிர்ணயக்குழு தலைவராக உள்ளவர் ஒருதலைப்பட்சமாக மருத்துவ கல்லூரி உரிமையாளர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார். எனவே அக்குழுவின் தலைவரை மாற்றம் செய்து வேறு ஓய்வுபெற்ற நீதிபதியை அரசு நியமனம் செய்து மத்திய அரசின் தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆணைப்படி கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: இந்தியாவில் 75 டிஜிட்டல் வங்கி அலகுகள்... நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

இதில் துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். அரசு பள்ளியில் படித்து முடித்த 12 ஆம் வகுப்பு மாணவர்களில் ஒருவருக்கு மட்டும் தான் இந்த கல்வி ஆண்டில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தனியார் பள்ளிகளில் நடக்கும் கட்டண கொள்ளைக்கு அரசு துணை போவது சரி இல்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 45% பள்ளி கட்டண உயர்வு , குறிப்பிட்ட சில பள்ளிகளில் அதிக கட்டணத்தை அரசு நியமித்து உள்ளது, இதனை உடனடியாக ரத்து செய்து பழைய கட்டணத்தை அமல்படுத்த வேண்டும். தீபாவளி பண்டிகை காலத்தில் கடைகளின் படிகளை அகற்றுவதும், வீடுகளை இடிப்பதும் சரியானதாக இல்லை. தீபாவளி பண்டிகை முடிந்த பிறகு விருப்புவெறுப்புகள் இன்றி எந்தவிதமான அரசியல் குறுக்கீட்டிற்கும் இடம் அளிக்காமல் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios