ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவு.! தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம்-அதிர்ச்சியில் மன்சூர் அலிகான்

நடிகைகள் திரிஷா, குஷ்பு, நடிகர் சிரஞ்சீவி மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர அனுமதி கோரிய வழக்கில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மறுத்துள்ளது.

High Court refuses to grant stay in Mansoor Ali Khan's case against Rs 1 lakh fine KAK

திரிஷா தொடர்பாக அவதூறு கருத்து

நடிகை திரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகர் மனுசூர் அலிகானுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.  தேசிய மகளிர் ஆணையம் சார்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு ஆகியோரும் மன்சூர் அலிகானுக்கு எதிராக கருத்து தெரிவித்தனர். இதனையடுத்து நிடகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு மன்சூர் அலிகான் அறிக்கை வெளியிட்டார்.

அடுத்த ஒரு நாட்களிலையே தான் பேசிய முழு வீடியோவையும் பார்க்காமல் தனது நற்பெயருக்கு களங்கம் கற்பித்ததாக குற்றம் சாட்டி, நடிகை திரிஷா, நடிகை குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி ஆகியோருக்கு எதிராக தலா ஒரு கோடி ரூபாய்  மான நஷ்டஈடு வழக்கு தொடர அனுமதி கேட்டு  நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

Kilambakkam Bus stand | கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறை-நிறைகள் என்னென்ன? - மக்கள் கருத்து

 

High Court refuses to grant stay in Mansoor Ali Khan's case against Rs 1 lakh fine KAK

ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறி, மன்சூர் அலிகான் மனுவை ஒரு லட்ச ரூபாய் அபராதத்துடன் தள்ளுபடி செய்து  உத்தரவிட்டிருந்தது. மேலும் இந்த அபராதத் தொகையை இரண்டு வாரங்களில் சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு செலுத்தி, அதுகுறித்து தெரிவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் பெரும் தொகையான ஒரு லட்சம் ரூபாயை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்று மன்சூர் அலிகான் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டட் து. இதை கேட்ட நீதிபதி ஒருவரை பற்றி கருத்துத் தெரிவிக்கும் முன்பு அதனால் ஏற்படும் தாக்கத்தை உணர்ந்து த செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி, 10 நாட்கள் அவகாசம் வழங்கினார். 

High Court refuses to grant stay in Mansoor Ali Khan's case against Rs 1 lakh fine KAK

ஒரு லட்சம் அபராதம்- தடை விதிக்க மறுப்பு

இந்த நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மன்சூர் அலிகான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஷபிக் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அபராத தொகையை செலுத்துவதாக தனி நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டு, கால அவகாசமும் பெற்றுவிட்டு, தற்போது அதனை எதிர்த்து எப்படி மேல்முறையீடு வழக்கு தொடர முடியும் என்று கேள்வி எழுப்பி, தனி நீதிபதி உத்தரவிற்கு தடைவிதிக்க மறுத்தனர். அந்த உத்தரவை திரும்ப பெறக் கோரி தனி நீதிபதி முன் வலியுறுத்தலாம் அல்லது பணத்தை கட்ட முடியுமா, முடியாதா என்று தெரிவிக்கலாம் என்று மன்சூர் அலிகான் தரப்புக்கு அறிவுறுத்தி, விசாரணையை பிப்ரவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படியுங்கள்

திரிஷாவுக்கு எதிராக மான நஷ்ட ஈடு வழக்கு... மன்சூர் அலிகானுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்-நீதிமன்றம் அதிரடி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios