Asianet News TamilAsianet News Tamil

இன்று இந்த 17 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy rain will lash these 17 districts today..Meteorological department has warned
Author
First Published May 26, 2023, 4:43 PM IST

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வரும் 30-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இன்று, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க : ஐடி ரெய்டுக்கு எதிராக போராடியவர்களுக்கு தயிர் பச்சடியுடன் பரிமாறப்பட்ட பிரியாணி

வரும் 28, 29,30 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை : 26.05.20223, 27.05.2023 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : இன்று முதல் வரும் 29-ம் தேதி வரை, தென் தமிழக கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள் கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் வரும் 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.எனவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி வழக்கு.. மேலும் 8 பேர் கைது.. 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை..

Follow Us:
Download App:
  • android
  • ios