Asianet News TamilAsianet News Tamil

சூடுபிடிக்கும் ஆருத்ரா மோசடி வழக்கு.. மேலும் 8 பேர் கைது.. 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை..

ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார்.

Arudra scam case heating up.. 8 more people arrested.. Charge sheet in 2 weeks
Author
First Published May 26, 2023, 4:15 PM IST

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோயம்புத்தூர் உட்பட தமிழகத்தின் 28 இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. தங்கள் நிறுவனத்தில் மூதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக விளம்பரம் செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் வாக்குறுதியை நம்பி சுமார் ஆயிரக்கணக்கானோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்திருந்தனர். ஆனால் ஆருத்ரா கோல்ட் நிறுவனம்  சொன்னபடி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளது.

இதையும் படிங்க : வருமான வரித்துறையினர் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.. அண்ணாமலை வலியுறுத்தல்

இதனிடையே அந்நிறுவனம் மக்களிடம் ஆசையை தூண்டி, மோசடியில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து வந்த புகார்களின் அடிப்படையில்,  பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் ஆருத்ரா கோல்டு தொடர்பான அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு முதலீடுகளை பெற தடை விதித்தனர்.

தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது வரை 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட பலருக்கும் எதிராக லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆருத்ரா மோசடி வழக்கில் அடுத்த 2 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ இந்த வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனினும் அவர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலி மூலம் பேசுவதால் ட்ராக் செய்ய முடியவில்லை. ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் மேலும் 8 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இதுவரை 61 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : ஆட்சி மாற்றத்தின் அடையாளம் தான் செங்கோல்.. ஆதாரம் உள்ளது.. திருவாவடுதுறை ஆதீனம் விளக்கம்

Follow Us:
Download App:
  • android
  • ios