ஐடி ரெய்டுக்கு எதிராக போராடியவர்களுக்கு தயிர் பச்சடியுடன் பரிமாறப்பட்ட பிரியாணி
கோவையில் வருமான வரி சோதனை நடைபெறும் செந்தில் கார்த்திகேயன் இல்லத்தில் குவிந்துள்ள திமுக தொண்டர்களுக்கு வெஜ் பிரியாணி தயிர் பச்சடி மதிய உணவாக வழங்கப்பட்டது.
தமிழகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் எனக் கூறப்படும் திமுகவைச் சேர்ந்த செந்தில் கார்த்திகேயன் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமானவரிச் சோதனையானது நடைபெற்று வருகிறது.
சோதனை நடைபெறுவதை அறிந்த திமுக தொண்டர்கள் அவரது வீட்டுக்கு முன் திரண்டு அங்கேயே காத்திருக்கின்றனர். சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக வருமான வரி சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வீட்டுக்கு வெளியே காத்திருக்கும் தொண்டர்களின் வசதிக்காக சேர்கள், பிஸ்கட் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மதிய உணவாக வெஜ் பிரியாணி மற்றும் தயிர் பச்சடி வழங்கப்பட்டது.
இது ஒரு புறம் இருக்க ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிற்கும் அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்றனர். சோதனை நடத்தச் சென்ற அதிகாரிகளிடம் கரூர் மாநகராட்சி மேயர் உள்பட திமுக தொண்டர்கள் அதிகாரிகளை மறித்துக் கொண்டு அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கேட்டு தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
திருச்சியில் இருந்து குமரிக்கு காதலியை தேடி சென்ற பெண் விரட்டியடிப்பு