Tamilnadu Heavy Rain: அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நெல்லை, குமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயிலும் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை கடந்த சில நாட்களாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங்கை முதல் வெட்டு வெட்டிய ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர்! துப்பாக்கி! நாட்டு வெடி குண்டுகள் பறிமுதல்!
அதேபோல் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: யார் வீட்டு பணத்தை வீணாக்குறீங்க! அரசு செலவில் தனியார் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா?ரத்து செய்யுங்கள்!அன்புமணி
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (அதாவது பிற்பகல் 1 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.