Asianet News TamilAsianet News Tamil

தொடர்ந்து நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், வட தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிப்பதால் தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

Heavy rain warning has been issued for 12 districts due to low pressure area
Author
First Published Dec 11, 2022, 7:25 AM IST

காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பு

வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று இரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 70கிலோ மீட்டர் வேகத்தில் காற்றானது வீசியது. இதன் காரணமாக 5 பேர் உயிரிழந்த நிலையில், 400க்கும் மேற்பட்ட மரங்கள் சேதமடைந்தது. சேதமடைந்த மரங்களை அகற்றும் நடவடிக்கையில் சென்னை மாநகாரட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதே போல கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மீனவர்களின் படகுகளும் ஒற்றோடு ஒன்று மோதி கடலில் மூழ்கியது.

மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!

Heavy rain warning has been issued for 12 districts due to low pressure area

12 மாவட்டங்களுக்கு கன மழை

இந்தநிலையில் கரையை கடந்த மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலு குறைந்தது. தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு விழந்து வட தமிழகத்தில் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோவை உள்ளிட்ட 12 மாவடங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதே போல சென்னையிலும் மழையானது தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பூண்டி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதன் காரணமாக நீர் திறப்பு 5ஆயிரம் கன அடியில் இருந்து 10ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொதஸ்தலை அற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!

Follow Us:
Download App:
  • android
  • ios