மாண்டஸ் புயலில் இருந்து மக்களை காப்பாற்றிய சென்னை மாநகராட்சிக்கு நன்றி.. ட்விட்டரில் குவியும் பாராட்டுக்கள் !!
மாண்டஸ் புயல் பாதித்த பகுதிகளை மீட்டெடுத்த சென்னை மாநகராட்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று நள்ளிரவு மாமல்லபுரத்தில் கரையை கடந்தது. புயல் கரையை கடந்த போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ வேத்தில் காற்று பலமாக வீசியது. இதனால் பெரும்பலான இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது.
சாலைகளில் சாய்ந்த மரங்களை மாநகராட்சி பணியாளர்கள் இரவோடு இரவாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கனமழையின் காரணமாக மின்வெட்டுகள் இருந்த போதும் அவை உடனடியாக சரிசெய்யப்பட்டது. கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு முன்கூட்டியே பேரிடர் அமைப்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே ஆலோசனை செய்து அதற்கான பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டிருந்தது.
இதையும் படிங்க..இமாச்சல பிரதேசத்தின் அடுத்த முதல்வர் ஆகிறார் சுக்விந்தர் சிங் சுகு.. காங்கிரஸ் வட்டாரங்கள் தகவல்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனுக்குடன் அகற்றப்பட்டது. மின்சாரம் மற்றும் பல்வேறு புகார்கள் வந்த உடனே, அந்த பிரச்னையை தீர்த்தது சென்னை மாநகராட்சி. தற்போது சென்னை மாநகராட்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
குறிப்பாக மழைக்கு பிறகு சாலைகளில் உடைந்த மரங்கள் மற்றும் பிற குப்பைகள் முதல் சேதமான நிழற்கூடை வரை மீட்பு பணிகள் துரிதமாக இருந்ததாகவும், பணியாளர்களும் அசாதாரண சூழலை கடந்து பணியாற்றினார் என்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். சென்னை மக்கள் பலரும் ட்விட்டரில் தொடர்ந்து சென்னை மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க.. புயலில் இருந்து சென்னை மீண்டாச்சு.. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
இதையும் படிங்க.. மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!