Asianet News TamilAsianet News Tamil

மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக இருக்கிறார்கள்.. தமிழக அரசை பாராட்டிய ராமதாஸ்!

மக்கள் அச்சத்தை விடுத்து நிம்மதி அடைந்துள்ளனர் என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார்.

People have given up their fear and felt relieved pmk founder Ramadoss thanks tn govt
Author
First Published Dec 10, 2022, 5:09 PM IST

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.

தமிழகத்தில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பாக இருந்ததாக பொதுமக்கள் பரட்டை வருகின்றனர். இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசுக்கு பாராட்டை தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் அச்சத்துடன் எதிர்பார்க்கப்பட்ட மாண்டஸ் புயல் பெரிய அளவில் சேதங்களை ஏற்படுத்தாமல் கரையை கடந்து சென்றிருக்கிறது.

இதையும் படிங்க.. கோவாவில் சர்வதேச விமான நிலையம்.. நாக்பூர் டூ ஷீரடி சம்ருத்தி நெடுஞ்சாலை - பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!

People have given up their fear and felt relieved pmk founder Ramadoss thanks tn govt 

பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாததால் பெரும்பான்மையான மக்கள் அச்சத்திலிருந்து விடுபட்டு நிம்மதி அடைந்துள்ளனர். புயலை எதிர்கொள்ள தமிழக அரசு  போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சாய்ந்து விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்படுகின்றன.  மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை.

அதற்காக பாராட்டுகள். நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுவதைப் போன்றே கிராமப்பகுதிகளிலும் புயல் பாதிப்புகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். புயல், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, உடை வழங்கப்பட வேண்டும். வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க அரசு முன்வர வேண்டும்.

திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் வாழைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன.  கடலோரப்பகுதிகளில் மீனவர்களின் படகுகள் சேதமடைந்திருக்கின்றன.  பாதிக்கப்பட்ட உழவர்களுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க.. புயலில் இருந்து சென்னை மீண்டாச்சு.. மக்கள் திருப்தியாக இருக்கின்றனர் - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Follow Us:
Download App:
  • android
  • ios