தமிழகத்தில் இன்று நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க:கனமழை காரணமாக 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை.. ஆட்சியர் உத்தரவு - எங்கு தெரியுமா?

மேற்குதிசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.மேலும் இன்று நீலகிரி, கோவை மாவட்டத்தின்‌ மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில்‌ கனமழை பெய்யக்கூடும். அதே போல் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மெட்ரோ ரயிலில் செல்பவர்களா நீங்கள்? அப்படினா இன்று முதல் இது கட்டாயம்..!

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ்‌
அளவில்‌ இருக்கக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:மாட்டுக்கறி உணவு புகைப்படம் பதிவிடக்கூடாதா..? எச்சரிக்கை விடுத்த சென்னை காவல்துறை நடவடிக்கையால் சர்ச்சை