மாட்டுக்கறி உணவு தொடர்பான புகைப்படத்தை பதிவிட்ட  டுவீட்டர் பதிவிற்கு  சென்னை காவல்துறை இத்தைகைய பதிவு தேவையற்றது என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மாட்டுக்கறி உணவு- டுவிட்டர் பதிவு

மாட்டுக்கறி உணவு தமிழகம் மட்டுமில்லாமல் பெரும்பாலான இடங்களில் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. இந்த வகையில் பல இடங்களில் மாட்டுக்கறி உணவுக்கென தனி கடைகளும் இயங்கி வருகிறது. இஸ்லாமியர் மட்டுமில்லாமல், உலகமுழுவதும் பல்வேறு மதத்தினரும் விரும்பி சாப்பிடும் உணவாக மாட்டுக்கறி உள்ளது. வட மாநிலங்களில் மாட்டுக்கறி தொடர்பாக மத பிரச்சனையும் ஏற்பட்டுள்ளது. மாடுகளை சந்தைக்கு கொண்டு சென்ற இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட நிகழ்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாட்டுக்கறி உணவு தொடர்பான புகைப்படத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த அபுபக்கர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மெட்ரோ ரயிலில் செல்பவர்களா நீங்கள்? அப்படினா இன்று முதல் இது கட்டாயம்..!

மாட்டுக்கறி உணவு- தேவையற்ற பதிவு

Scroll to load tweet…

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் டுவிட்டரில் அவரை பின் தொடர்பவர்களும், மாட்டுக்கறி உணவு தொடர்பாக சாட் செய்து வந்தனர். அப்போது சென்னை காவல்துறை சார்பாக அந்த பதிவில் குறுக்கிட்டு இந்த பதிவு தேவையற்றது என கூறியுள்ளது. இதனால் அபுபக்கர் உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வந்த நிலையில், சென்னை காவல்துறை அந்த பதிவை நீக்கியுள்ளது. 

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.16, டீசல் ரூ.18..! தயார் நிலையில் 40 ஆயிரம் லிட்டர்..? மீண்டும் வந்த ராமர் பிள்ளை

காவல்துறை விளக்கம்

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அதில் தாங்கள் பதிவிட்டTweet சென்னை காவல் துறையின் பக்கத்தில் Retweet செய்யப்பட்டதால், பொது மக்களின் பயன்பாட்டுக்கான Twitter பக்கத்தில் தனிப்பட்ட பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்திற்காக இந்த பதிவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தவறுதலாக தங்களுடைய பக்கத்திலேயே இது பதிவிடப்பட்டதற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது. இது தங்களுடைய தனிப்பட்ட உணவுத்தேர்வினைக் குறித்தல்ல எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

டெங்கு - சிக்குன்குனியாவை தடுக்கும் புதிய கொசு...! புதுச்சேரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தல்