பத்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை.. அடுத்த 3 மணி நேரம் வெளுத்து வாங்க போகுது - வானிலை ஆய்வு மையம்!
Tamil Nadu Weather Update : மிக்ஜாம் புயல் மிரட்டி சென்றுள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பொழிய அதிக வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் தேதி துவங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. அன்று தொடங்கி இன்று வரை சுமார் இரண்டு மாத காலமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் பரவலாக மிதமானது முதல் அதிகனத்த மழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் எதிர்வரும் நாட்களில் மிதமானது முதல் அதிக கனத்த மழையை வரை எதிர் பார்க்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களை மிக்ஜாம் புயல் பெரிய அளவில் மிரட்டி சென்றுள்ளது.
வரலாறு காணாத அளவில் மிகப்பெரிய மழைப்பொழிவும் ஏற்பட்டுள்ளது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் பெரிய அளவில் ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் அவர்களுக்கு உதவிகளை செய்திட அரசு முனைந்து வருகிறது, அதே சமயம் இன்று டிசம்பர் 9ம் தேதி, வெள்ள பாதிப்புகளை சென்னை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் சென்னை வரவேற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Schools Leave: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் தற்பொழுது வெளியிட்டுள்ள தகவலின்படி கோவை, திருப்பூர், விழுப்புரம், கடலூர், திண்டுக்கல், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியில் பல இடங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது.