உதகை மலை ரயிலில் பயணிக்க அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

உதகையில் இரண்டாவது சீசன் களைகட்டியுள்ள நிலையில் மலை ரயிலில்  பயணிக்க சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால் உதகை ரயில் நிலையத்தில்  கூட்டம் அலைமோதுகிறது. 
 

heavy crowed in mettupalayam hills train

உதகை - குன்னூர் -  மேட்டுப்பாளையம் இடையேயும், குன்னூர் - உதகை இடையேயும் நாள்தோறும் மலை ரயில்  இயக்கப்படுகிறது. உதகையில் இரண்டாவது சீசன் துவங்கியுள்ள  நிலையில் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளதால்  சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. தமிழகத்தின் சமவெளி பகுதிகளில்  இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவு வந்த வண்ணம் உள்ளனர்.

பனங்காட்டு படை கட்சியின் தலைவர் ராக்கெட் ராஜா அதிரடி கைது

இதேபோல் அண்டை  மாநிலங்களான கேரளா, கர்நாடகாவில் இருந்தும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவ்வாறு  வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகவும் பழமை வாய்ந்த மலைரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் மலை ரயிலில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழகத்தில் 5 நாட்கள் கனமழை.. இன்று எந்தெந்த பகுதியில் கனமழை..? வானிலை அப்டேட 

உதகை - குன்னூர் இடையே  இயக்கப்படும் ரயிலில் பயணிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்  வாங்கி பயணிக்கின்றனர். பலரும் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி  செல்கின்றனர். மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வரும்  நிலையில், உதகை - கேத்தி இடையேயும், குன்னூர் - ரன்னிமேடு இடையேயும்  சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்வரும் 9ஆம் தேதி வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் இருக்கும் என்பதால் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios