Asianet News TamilAsianet News Tamil

இந்துக்களின் நம்பிக்கையோடு எது நடந்தாலும் கலவரம் என முத்திரை குத்துவதை நிறுத்துங்கள் - தமிழிசை ஆவேசம்

இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள் என ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

governor tamilisai Soundararajan slams dmk government in madurai vel
Author
First Published Nov 4, 2023, 6:20 PM IST | Last Updated Nov 4, 2023, 6:20 PM IST

மதுரையில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்சியில் பங்கேற்பதற்காக தெலங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, புதிய கல்விக் கொள்கை பற்றிய மாநட்டிற்காக வந்துள்ளேன். எல்லா மாநிலங்களிலும் புதிய கல்விக்கொள்கை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

கல்வி அறையில் இருந்து உலக அளவிற்கு மாணவர்களை உயர்த்துவதற்காக தான் இந்த கொள்கை. ஆனால் அதுவும் தமிழகத்தில் அரசியல் ஆக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பது வேதனை. நீட்டிலும் சரி, புதிய கல்விக் கொள்கையிலும் சரி மாணவர்கள் சிறப்பாக செயலாற்ற தயாராக இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் கல்வியில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது. இது மாற்றப்பட வேண்டும். வேண்டாதவற்றில் தலையிட்டு, வேண்டியதை விட்டு விடுகிறார்கள். 

சென்னையில் பள்ளி மாணவர்களை தாக்கி சீன் காட்டிய நடிகையை அலேக்கா தூக்கி சென்ற போலீஸ்

ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட்டிற்கு என்றார்கள். ஆனால் இந்த கையெழுத்து இயக்கத்தின் முதல் கையெழுத்து தான் இது என்பது எனக்கு தெரியாமல் போய்விட்டது. பொய் சொல்லி ஆட்சிக்கு வந்து தற்போது நீட்டை பற்றி தெரியாதவர்களிடம் கையெழுத்து வாங்கி கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் லட்சியத்தோடு படிக்க ஆரம்பித்து விட்டார்கள். லட்சக்கணக்கில் கையெழுத்து வாங்கினாலும் பிரச்சனை இல்லை. மதுரை எய்ம்ஸ் நிர்வாக ரீதியாக தற்போது நடைபெற்று வருகிறது. 

தம்பி உதயநிதியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், நீங்கள் முட்டையை தூக்கி காண்பித்தீர்கள், ஈரோட்டில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த 1200 முட்டைகள் அழுகி இருந்ததாம். அதனால் அன்று குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை. இதை முதலில் பாருங்கள் இது உச்ச நீதிமன்ற தீர்ப்பு, தேசிய அளவில் உள்ள கொள்கை. தென் பகுதியில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்பட்ட கொடுமை மன வருத்தமாக இருக்கிறது. வட மாநிலத்தில் நடைபெற்றிருந்தால் பொங்கி எழுந்திருப்பார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

கண்டதேவி கோவில் தேரோட்டத்திற்கு நீதிமன்றம் கடுமையாக சொல்லி இருக்கிறார்கள். துணை ராணுவத்தை வைத்து நாங்கள் நடத்தவா என்று கேட்கிறார்கள். இந்துக்களின் நம்பிக்கையுடன் எது நடைபெற்றாலும் கலவரம் என்று முத்திரை குத்துவதை விட்டுவிட்டு தமிழகத்தில் சாதிய வன்கொடுமையை ஒழிக்க பாருங்கள். 13 மொழிகளில் பேசுவதெல்லாம் இருக்கட்டும் முதலில் மக்களுக்கான மொழியில் பேசி பட்டியல் இன மக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் நடத்த ஏன் அனுமதி மறுக்கிறார்கள். உங்களால் சட்ட ஒழுங்கை பாதுகாக்க முடியவில்லையா. தமிழ் தான் எங்களுக்கு மற்ற மொழிகள் வேண்டாம் என்று கூறிவிட்டு இன்று எனது பேட்டி 13 மொழிகளில் ஒளிபரப்பாகிறது என்று முதல்வர் கூறுகிறார். வயிற்று பிழைப்புக்காக மற்ற மொழிகளை கற்றுக் கொள்ளக்கூடாது. ஆனால் அரசியல் பிழைப்புக்காக மட்டும் மொழிகளை கற்றுக் கொள்ளலாம். மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதால் தமிழ் மொழி பின்னடைய போவதில்லை. 

மனைவியுடன் கள்ளக்காதல்; எஸ்.ஐ.யின் பிறப்புறுப்பை அறுத்த காவலருக்கு வலைவீச்சு

அரசியல் அமைப்பு சட்டத்தில் 167 வது பிரிவின்படி மாநிலத்தில் தேவைப்படும்போது எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஆளுநரிடம் சென்று விவாதிக்க வேண்டும். நட்புறவுடன் கூடிய அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொள்கிறதா என்றால் இல்லை. விருந்திற்கு அழைத்தால் கூட ஏன் புறக்கணிக்க வேண்டும்? இதுபோன்ற நேரங்களில் தான் பேச முடியும். புதுச்சேரியில் கூட காங்கிரஸ், திமுக வரமாட்டோம் என்று சொல்வது நல்ல பழக்கம் இல்லை. தமிழகத்தில் இந்த பிரச்சனை காரணமாக பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் கூட செய்தியாகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios