ஆன்லைன் ரம்மி தடை செய்யும் அரசின் சட்ட மசோதா... மீண்டும் திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!!

ஆன்லைன் ரம்மி தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். 

governor rn ravi sent back the govts bill banning online rummy

ஆன்லைன் ரம்மி தடை செய்யும் மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பல்வேறு தற்கொலைகள் நிகழ்ந்ததோடு பலர் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர். இதனால் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிப்பது மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்துரு தலைமையில் குழு நியமிக்கப்பட்டது. அந்த குழு சமர்பித்த அறிக்கையின்படி, தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய அவசர சட்டம் இயற்றப்பட்டு கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதையும் படிங்க: தாமதமாகும் குரூப் 4 தேர்வு முடிவுகள்... டிவிட்டரில் டிரெண்டாகும் #WeWantGroup4Results ஹாஷ்டேக்!!

அதற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததால் அவசர சட்டம் அக்டோபர் 3 ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 17 ஆம் தேதி மீண்டும் தமிழக சட்டமன்றத்தில் அவசர சட்டத்தை நிரந்தரமாக்கும் சட்ட மசோதா அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு தமிழக கவர்னரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 28 ஆம் தேதி அனுப்பப்பட்டது. இந்த நிலையில் சட்ட மசோதா குறித்து, கடந்த 24 ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் இருந்து தமிழக அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்ட மசோதா குறித்து கவர்னருக்கு ஏற்பட்டிருக்கிற சில சந்தேகங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: வித் அவுட் மேக்கப்பில்.. ரம்யா பாண்டியனை காப்பி அடித்து மொட்டை மாடியில்.. கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய அனுபமா!

ஆளுநர் கேட்ட விளக்கங்களுக்கு சட்டத்துறை சார்பில் 24 மணி நேரத்தில் விளக்கம் தயாரித்து, கடந்த 25 ஆம் தேதி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். ஆனாலும், ஆளுநர் சட்ட மசோதாவுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார். ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். மீண்டும் சில திருத்தங்களை செய்து அனுப்பும்படி ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios