Governor Ravi : திமுகவை வீழ்த்த திட்டம் போட்டு சென்னைக்கே ஓட்டுரிமையை மாற்றினாரா ஆளுநர் ரவி? வெளியான தகவல்

நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர் ரவி தனது வாக்குரிமையை பீகார் மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு மாற்றியுள்ளார். எனவே நாளை தமிழகத்தில் தனது முதல் வாக்கை பதிவு செய்யவுள்ளார். 

Governor Ravi who transferred voting rights from Bihar to Tamil Nadu KAK

ஆளுநரும் தமிழக அரசும்

தமிழகத்தில் ஆளுநர் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.  அரசு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தங்களை ஆளுநர் தெரிவிப்பதாகவும், தமிழக அரசுக்கு எதிராக கருத்துகளை பரப்பி வருவதாக திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். மேலும் தமிழ் தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டை தமிழகம் என மாற்றியது. இது போன்ற பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.  மேலும் ஆளுநர் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக நீதி மன்றத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றமும் ஆளுநரின் செயல்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்திருந்தது.

நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்.! 4 கோடி ரூபாய் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது.! வெளியான வாக்குமூலம் வீடியோ

Governor Ravi who transferred voting rights from Bihar to Tamil Nadu KAK

தமிழகத்திற்கு வாக்குரிமையை மாற்றிய ஆர் என் ரவி

இந்த நிலையில் தமிழகத்தில் நாளை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதனிடையே ஆளுநர் ரவி தமிழகத்திற்கு ஓட்டுரிமையை மாற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ராஜ்பவன் வெளியிட்டுள்ள தகவலில், நாளை (19.04.2024) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு.ஆர்.என்.ரவி அவர்கள் மற்றும் ஆளுநரின் துணைவியார் திருமதி. லட்சுமி ரவி, ஆகியோர் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் 2024-ஐ முன்னிட்டு சென்னை, வேளச்சேரி சாலையில் உள்ள அட்வண்ட் கிறிஸ்துவ நடுநிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை பதிவு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Governor Ravi who transferred voting rights from Bihar to Tamil Nadu KAK

தமிழகத்திற்கு வாக்குரிமையை மாற்றியது ஏன்.?

இதற்கு முன்பு தமிழகத்தில் ஆளுநர்களாக இருந்த ரோசைய்யா, சுர்ஜித் சிங் பர்னாலா ஆகியோர் தங்களது வாக்குகளை ஆந்திரா மற்றும் பஞ்சாப்பில் வைத்திருந்தனர். வாக்குப்பதிவன்று தங்களது மாநிலத்திற்கு சென்று வாக்களிப்பார்கள். ஆனால் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆர்.என்.ரவி தனது வாக்குரிமையை தமிழகத்தில் மாற்றியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திமுகவிற்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை தெரிவித்து வரும் ஆளுநர் ரவி, திமுகவை வீழ்த்தவே தமிழகத்தில் வாக்குரிமையை மாற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்ணாமலை வெற்றி பெறவேண்டும்; திடீரென விரலை வெட்டிய பாஜக நிர்வாகியால் தொண்டர்கள் அதிர்ச்சி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios