Asianet News TamilAsianet News Tamil

நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்.! 4 கோடி ரூபாய் யாருக்காக கொண்டு செல்லப்பட்டது.! வெளியான வாக்குமூலம் வீடியோ

நாடாளுமன்ற தேர்தலில் நெல்லை தொகுதியில் பாஜக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக 4 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டதாக அவரது உறவினர் முருகன் என்பவரின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

The video of Nainar Nagendran relative statement regarding the confiscation of 4 crore rupees has been released KAK
Author
First Published Apr 18, 2024, 2:02 PM IST

ரயிலில் 4 கோடி பறிமுதல்

நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்து நாளை காலை வாக்குப்பதிவு தொடங்குகிறது. இந்தநிலையில் வாக்காளர்களுக்கு பல்வேறு இடங்களில் வேட்பாளர்கள் பணம் கொடுப்பதாக வீடியோவுடன் தகவல் பரவி வருகிறது. ஆங்காங்கே பறக்கும் படையும் சோதனை செய்து பண விநியோகத்தை தடுத்து வருகிறது. இதற்கிடையே கடந்த வாரம் சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயிலில் கொண்டு செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ்.7 கோச்சில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது  3 நபர்கள் 6 பைகளில் கட்டுகட்டாக பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து மூன்று நபர்களை கைது செய்த போலீசார் தாம்பரம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர் .

The video of Nainar Nagendran relative statement regarding the confiscation of 4 crore rupees has been released KAK

பாஜக வேட்பாளருக்காக கொண்டு செல்லப்பட்ட பணம்

நெல்லை பாஜக வேட்பாளரின் செலவுக்காகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காகவும் சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டலில் இருந்து 4 கோடி ரூபாய் பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. மேலும் பிடிப்பட்ட. நபர்கள் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு தாம்பரம் காவல் நிலையத்தில் இருந்து சம்மன் அனுப்பியுள்ளது. வருகின்ற 21ஆம் தேதிக்குள் தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே 4 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

வெளியான ஷாக் வீடியோ

இதனிடையே நயினார் நாகேந்திரனுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில், அவரது உறவினர் முருகன் என்பவர் கொடுத்த வாக்குமூலம் தற்போது சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட பணம் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது தான் என நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரனின் பிஏ மணிகண்டன் கேட்டுக்கொண்டதால்  சென்னையிலிருந்து நெல்லைக்கு பணம் எடுத்து செல்ல புளூ டைமண்ட் ஓட்டலுக்கு  பெருமாள் என்பவரை அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் தாம்பரம் ரயில் நிலையத்தில் கைதான மூன்று பேரில் ஒருவர் பெருமாள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாள் அவரது வாக்குமூலத்தில் தனது முதலாளி முருகன் அனுப்பியதால் ப்ளூ டைமண்ட் ஹோட்டலுக்கு சென்று நெல்லைக்கு புறப்பட்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

4 கோடி ரூபாய் யாருடைய பணம்.? வெளியான எப்ஐஆர்.!! நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்.. சம்மன் அனுப்பிய போலீஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios