Governor Ravi : நாடே ராமர் மயமாகி வருகிறது.! இந்தியர் இதயத்தில் ராம நாமமே ஒலிக்கிறது -ஆளுநர் ரவி
திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலை தூய்மை செய்த ஆளுநர் ரவி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார் என தெரிவித்தார்.
ஶ்ரீரங்கம் கோயிலை சுத்தம் செய்த ஆளுநர்
108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது துணைவியாருடன் தரிசனம் செய்வதற்காக இன்று ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வந்தார். கோவில் நிர்வாகம் சார்பாக பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோவில் முன்புறமுள்ள குப்பைகளை தூய்மை செய்யும் பணியில் அவரும் அவரது துணைவியாகும் ஈடுபட்டனர்.
இந்தியா முழுவதும் ராமர்மயம்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராமர் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். இந்திய முழுவதும் மீண்டும் ராமர்மயாகி வருகிறது. ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ராம நாமமே ஒலிக்கிறது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என ஆளுநர் ரவி கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்