உணவுத் திருவிழாவில் ”பீப் பிரியாணி”.. சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தமிழக அரசு திடீர் அனுமதி

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.
 

Government of Tamil Nadu allowed to set up "Beep Biryani" in food festival

சென்னை தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத்திருவிழாவில் பீப் பிரியாணிக்கு அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை தீவு திடலில் சிங்கார சென்னை உணவு திருவிழா 2022 நேற்று தொடங்கியது. 14ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த உணவு திருவிழாவில் பீப் பிரியாணி மட்டும் இடம்பெறாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று முதல் அதில் பீப் பிரியாணி இடம் பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  

மேலும் படிக்க:சென்னையில் உணவு திருவிழா...! மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பீஃப் பிரியாணி..விளக்கம் அளித்த அரசு அதிகாரிகள்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை தீவுத்திடலில் மூன்று நாட்கள் நடைபெறும் உணவு திருவிழா நேற்று தொடங்கியது . இதனை அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர்.  மொத்தம் 150 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ராகி புட்டு முதல் முடக்கத்தான் தோசை வரை பல்வேறு விதமான பாரம்பரியமான உணவுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெறும். 

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட உணவு கண்காட்சி , தற்போது நடைபெறுகிறது.கோவில்பட்டி கடைலை மிட்டாய், திருநெல்வேலி அல்வா உள்ளிட்ட அனைத்து பிரபலமான உணவுப்பொருட்களும் இங்கு கிடைக்கும்.   மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் 10 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி ஏன் இல்லை என்று சர்ச்சை எழுந்தது. இதற்கு உணவு என்பது தனி மனித உரிமை என்றும் பீப் பிரியாணி அரங்கம் அமைக்க பீஃப் பிரியாணி கடை உரிமையாளர்கள் கேட்டிருந்தால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் விளக்கம் அளித்திருந்தார்.

 மேலும் படிக்க:உணவுத் திருவிழாவில் பீஃப் பிரியாணி ஏன் இல்லை.!நானும் பீஃப் சாப்பிடுபவன் தான்.!-மா.சுப்பிரமணியன் புதிய விளக்கம்

மேலும் பீஃப் பிரியாணி அரங்குகள் அமைக்க விற்பனையாளர்கள் யாரும் முன் வரவில்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இன்று முதல் உணவுத்திருவிழாபில் பீப் பிரியாணி இடம் பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios