Asianet News TamilAsianet News Tamil

பிரிட்ஜில் இருந்து தின்பண்டம் எடுத்த 5வயது சிறுமி.. மின்சாரம் பாய்ந்து துடி துடித்து பலி- சென்னையில் சோகம்

வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்த உணவு பொருட்களை எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி 5வயது சிறுமி துடி, துடித்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Girl dies due to electric shock from fridge  KAK
Author
First Published Aug 7, 2024, 8:48 AM IST | Last Updated Aug 7, 2024, 8:48 AM IST

மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

மின் கோளாறு காரணமாக வீட்டில் உள்ள பொருட்களின் மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு மொபைல் போன் சார்ஜ் வயரை கடித்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டது.

வீட்டில் மொபைல் போன் சார்ஜ் போட்ட பிறகு சுவிட்சை ஆப் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த சூழ்நிலையில் மீண்டும் ஒரு சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆவடி பகுதில் உள்ள நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் கவுதம் அவர் மகளிர் சுய உதவி குழுவுக்கு லோன் வாங்கி தரும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியா, இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். 

OOTY TRAIN : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக் தகவலை கொடுத்த தெற்கு ரயில்வே

Girl dies due to electric shock from fridge  KAK

பிரிட்ஜை திறந்த சிறுமி துடிதுடித்து பலி

மூத்த மகள் ரூபாவாதி வயது 5,  தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று மாலை பள்ளி முடித்து வீட்டிற்கு வந்த சிறுமி தனது சகோதரிகளோடு விளையாடியுள்ளார். இதனையடுத்து பிரிட்ஜில் வைக்கப்பட்டுள்ள தின்பண்டத்தை எடுத்து சாப்பிட அதனை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சிறுமி துடிதுடித்து மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், மகளை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ரூபாவதி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழந்த தகவல் அறிந்து விரைந்து வந்த ஆவடி காவல்துறையினர் சிறுமி இறப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே 5 வயது சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios