OOTY TRAIN : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? சுற்றுலாப் பயணிகளுக்கு ஷாக் தகவலை கொடுத்த தெற்கு ரயில்வே
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும், இயற்கையை ரசிக்கவும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மேட்டுபாளையத்தில் இருந்து உதகைக்கு செல்லும் மலை ரயில் சேவையானது ஒரு வார காலத்திற்கு ரத்து செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஊட்டியில் சுற்றுலா பயணிகள்
தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, ஏற்காடு என கோடை வாசஸ்தலம் உள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காகவும் இயற்கையை ரசிப்பதற்காகவும் பொதுமக்கள் இது போன்ற இடங்களுக்கு சென்று வருவார்கள். மக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகளும் தமிழக அரசு விதித்துள்ளது. குறிப்பாக கோடை காலத்தில் இ பாஸ் பெற்ற பிறகு தான் சுற்றுலா தளங்களுக்கு செல்ல வேண்டும் என விதிமுறை விதித்துள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை
மேலும் இயற்கையை சீரழிக்கும் வகையில் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பல வித கட்டுப்பாடுகள் இருந்தாலும் குளுமையான வானிலையை ரசிப்பதற்காக ஏராளமானோர் சென்று வருகின்றனர். கொடைக்கானல்,ஏற்காடு என பல மலை பகுதிகளுக்கு சென்றாலும் எங்கும் இல்லாத ஒன்று ஊட்டி மலை ரயில். இந்த மலை ரயிலில் பயணிப்பதற்காகவே பல நாடுகளில் இருந்தும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நிலச்சரிவு-மலை ரயில் சேவை பாதிப்பு
மேட்டுப்பாளையத்தில் இருந்து காலையில் புறப்படும் மலை ரயில் மலைப்பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் அழகை ரசிக்க சுற்றுலாப்பயணிகள் ஆசைப்படுவார்கள். ஆனால் மலைப்பாதை என்பதால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்பட்டு ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் முன்பதிவு செய்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவார்கள். இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் பெய்த கன மழையில் உதகை மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டது.
ooty train service
மலை ரயில் சேவை ரத்து
இந்தநிலையில் நீலகிரி முதல் மேட்டுப்பாளையம் வரை இயக்கப்படும் மலை ரயில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.