ஓட ஓட விரட்டி அடியுங்கள்... பாஜகவிற்குள் தேர்தல் வைத்தாலே அண்ணாமலையை தோற்கடித்து விடுவார்கள்.! காயத்ரி ரகுராம்
அண்ணாமலைக்கு போக்கிரிதனம் செய்வதும்,பொய் சொல்வது மட்டும் தான் தெரியும் என விமர்சித்துள்ள காயத்ரி ரகுராம், அண்ணாமலை ஓட்டு கேட்டு வந்தால் விரட்டியடியுங்கள் என கூறியுள்ளார்.
வாக்களிக்க வேண்டாம்
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் முதல் நட்சத்திர பேச்சாளர்கள் வரை வீதி வீதியாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காளிவேலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகை மற்றும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராமன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர், திருட்டு திமுகவிற்கும் திருட்டு பாஜகவிற்கும் தயவு செய்து வாக்களிக்க வேண்டாம் எனவும்,ஜி.எஸ்.டி வரியால் பொதுமக்களின் கைகளில் 100 ரூபாய் கூட இல்லைஎன கூறினார்.
ஓட ஓட விரட்டுங்கள்
பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலைக்கு தெரிந்தது எல்லாம் பொய் பேசுவது,தொழிலதிபர்களிடம் பணம் புடுங்குவது, பொறுக்கித்தணம் செய்வது மட்டுமே எனவும் உங்கள் ஊருக்கு அண்ணாமலை ஓட்டு கேட்டு வந்தால் ஓட ஓட விரட்டி அடியுங்கள் என ஆவேசமாக பேசினார்.மேலும் பா.ஜ.கட்சிக்குள்ளேயே தேர்தல் வைத்தால் கூட அண்ணாமலை தோற்கடிக்கப்படுவார் என கூறிய அவர், கட்சிக்குள்ளேயே அவரை யாருக்கும் பிடிக்காது என பேசினார்.
மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த ஒரு நல்ல திட்டங்களையும் கொண்டு வரவில்லை எனவும், தற்போது ஆட்சியில் உள்ள திமுக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு துன்பங்களை தமிழக மக்களுக்கு இழைத்துள்ளதால் அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் காயத்ரி ரகுராம் பேசினார்.
இதையும் படியுங்கள்
BJP Manifesto: நாடே எதிர்பார்த்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! என்னனென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கு?