Asianet News TamilAsianet News Tamil

BJP Manifesto: நாடே எதிர்பார்த்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! என்னனென்ன சிறப்பு அம்சங்கள் இருக்கு?

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். 

lok sabha election 2024.. BJP election manifesto release tvk
Author
First Published Apr 14, 2024, 9:54 AM IST

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் முதல் ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணப்படுகிறது. இந்நிலையில் முதற்கட்டமாக 39 மக்களவைத் தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.

lok sabha election 2024.. BJP election manifesto release tvk

இந்நிலையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஒவ்வொரு கட்சியும் தங்களின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கைகளை ஏற்கனவே வெளியிட்டுள்ளன. அந்த வரிசையில் மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று காலை 9.30 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மோடி கேரண்டி என்ற பெயரில் இந்த தேர்தல் அறிக்கை வெளியாகியுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசின் திட்டங்களில் பயனடைந்த பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்,  உஜ்வாலா, ஜல் ஜீவன், விவசாய காப்பீடு முதல் தேர்தல் அறிக்கை வழங்கப்பட்டது. குறிப்பாக பெண்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவது குறித்த பல்வேறு திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios