பாஜக வெற்றி பெற்றால் மோடியை பிரதமராக்காதீங்க.. இவரை தேர்ந்தெடுங்க.. RSSக்கு யோசனை தெரிவித்த காயத்ரி ரகுராம்

மகாத்மா காந்தி திரைப்படம் உருவாகும் முன் மகாத்மா காந்தியை அறியாத ஜோக்கர் அல்லது தன்னை கடவுள் என்று நினைக்கும் ஜோக்கர் நமக்குத் தேவையில்லை என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

Gayathri Raghuram has appealed to the RSS organization not to make Modi PM again if BJP wins KAK

இறுதி கட்ட தேர்தல்

நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலையோடு பிரச்சாரம் முடிவடையவுள்ளது. இதனையடுத்து ஜூன் 1ஆம் தேதி இறுதி கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்து வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தநிலையில் மீண்டும் பாஜக அல்லது இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க வேண்டும் என அதிமுக நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தால் டபிள் எஞ்சின் சர்க்காருக்கு பதிலாக ஒரு நல்ல கேப்டன் பைலட்டை நியமிக்க வேண்டும் என்பதே ஆர்எஸ்எஸ்ஸுக்கு எனது வேண்டுகோள். நல்ல பைலட் இல்லாமல் டபிள் எஞ்சின் சர்கார் வைத்திருப்பதில் அர்த்தமில்லை. 

 

மீண்டும் மோடி வேண்டாம்

எஞ்சின் செயலிழந்தால்,  எஞ்சின் மாற்றலாம். ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல கேப்டன் பைலட் தேவை. மகாத்மா காந்தி திரைப்படம் உருவாகும் முன் மகாத்மா காந்தியை அறியாத ஜோக்கர் அல்லது தன்னை கடவுள் என்று நினைக்கும் ஜோக்கர் நமக்குத் தேவையில்லை. என்டிஏ கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜகவின் முன்னாள் நிர்வாகி நபரான நான் நிதின் கட்காரி ஜியை பிரதமராக தேர்ந்தெடுப்பேன். நாட்டை வழிநடத்தும் நல்ல மனிதர். .@RSSorg பிஜேபி உலகின் பணக்காரக் கட்சியாக மாறிவிட்டது, இந்தியப் பொருளாதாரம் மக்களிடையே பலவீனமாகிவிட்டது.. டிரில்லியன் டாலர் பாஜகவுக்கு மட்டுமே சொந்தமானது, இந்தியாவின் ஏழை குடிமக்களுக்கு அல்ல.

Entire Political Science மாணவர் மட்டும்தான் காந்தியை சினிமா பார்த்து தெரிஞ்சுக்கணும்: ராகுல் காந்தி

Gayathri Raghuram has appealed to the RSS organization not to make Modi PM again if BJP wins KAK

இந்தியா கூட்டணியில் பிரதமர் யார்.?

இந்தியா/யுபிஏ கூட்டணி ஆட்சி அமைத்தால், நமது பொருளாதாரத்தை உயர்த்தி, மக்கள் வறுமையில் வாடாமல் இருக்க உதவும் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்கவும். இந்திய கூட்டணி ஆட்சி அமைத்தால் பெரும் குழப்பம் ஏற்படும் என்று நம்புகிறேன். பிரதமர் வேட்பாளருக்கு நிறைய தேர்வுகள் இருக்கும். ஈகோ மற்றும் மோதல்கள் இருக்கும், ஆனால் மக்களுக்கு வழிநடத்த ஒரு நல்ல மனிதர் தேவை. ஆண்/பெண் நாட்டுக்கு சேவை செய்ய அனுமதிக்க வேண்டும்.

Gayathri Raghuram has appealed to the RSS organization not to make Modi PM again if BJP wins KAK

மதத்தின் பின்னால் சென்ற நாடுகள் போரில் மண்ணாகிவிட்டன

புகழ் முக்கியமல்ல, நமது அரசியலமைப்பை யார் பின்பற்றுகிறார்கள் என்பது முக்கியம். நமது ஒற்றுமை, சமத்துவம், தேசியவாதம், சமூக நீதி, இணைப்பு, சமாதானம், மக்கள் வாழ்க்கையின் உயர்வு (வேலை, பொருளாதாரம் மற்றும் குறைந்த வரி) ஆகியவை நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். உண்மையான குடிமகனாக இதை நான் விரும்புகிறேன். ஜூன் 4 மத பசி, பணப் பசி, புகழ் பசி, தீய சக்தி மறையட்டும். மதத்தின் பின்னால் சென்ற நாடுகள் போரில் மண்ணாகிவிட்டன. அத்தகைய தீய சக்திகளை வேண்டாம் என்று சொல்லலாம். ஜூன் 4 2026  இந்தியாவிற்கு சிறந்ததாக இருக்கட்டும் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். 

Modi visits TN : மோடியின் இன்றைய தமிழக பயண திட்டம் என்ன.? கோ பேக் மோடியை மீண்டும் ட்ரெண்ட் செய்யும் திமுக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios