Asianet News TamilAsianet News Tamil

Entire Political Science மாணவர் மட்டும்தான் காந்தியை சினிமா பார்த்து தெரிஞ்சுக்கணும்: ராகுல் காந்தி

மோடி தான் முதுகலை பட்டப்படிப்பு முடித்ததாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில், அதைப்பற்றி மறைமுகமாகக் கேலி செய்யும் வகையில் இவ்வாறு பேசியிருக்கிறார்.

Rahul Gandhi jabs at Narendra Modi's degree after PM's claim on Mahatma Gandhi sgb
Author
First Published May 30, 2024, 8:44 AM IST | Last Updated May 30, 2024, 8:55 AM IST

1982ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமான "காந்தி" வெளியாகும் வரை, மகாத்மா காந்தியைப் பற்றி உலகம் அறிந்திருக்கவில்லை என்று கூறிய பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மறைமுகமாகக் கிண்டல் செய்துள்ளார்.

இது குறித்து ட்விட்டரில் இந்தியில் வீடியோ பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “Entire Political Science மாணவர் மட்டுமே மகாத்மா காந்தியைப் பற்றி சினிமா பார்த்து அறிந்துகொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். மோடி தான் முழுமையான அரசியல் அறிவியல் (Entire Political Science) துறையில் முதுகலை பட்டப்படிப்பு முடித்ததாகச் சொல்லிக்கொள்ளும் நிலையில், அதைப்பற்றி மறைமுகமாகக் கேலி செய்யும் வகையில் ராகுல் காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார்.

உலகம் முழுவதும் இருளுக்கு எதிராகப் போராடும் வலிமையைக் கொடுத்த சூரியன் மகாத்மா காந்தி என்றும் உண்மை மற்றும் அகிம்சையின் வடிவில், அநீதிக்கு எதிராகத் துணிந்து நிற்கும் பலவீனமான மனிதனுக்கும் தைரியத்தைத் தரும் பாதையை உலகுக்குக் காட்டியவர் காந்தி என்றும் ராகுல் காந்தி புகழாரம் சூட்டினார். ஆர்.எஸ்.எஸ். மார்க்கத்தில் வந்தவர்கள் காந்தியைப் புரிந்துகொள்ள முடியாது என்றும் அவர் சாடினார்.

வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்கள் யார்? யாருக்கு என்ன பலம்?

முன்னதாக ஒரு தொலைக்காட்சி செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த மோடி, 1982ஆம் ஆண்டு 'காந்தி' திரைப்படம் வரும் வரை மகாத்மா காந்தியை உலகம் அறியவில்லை என்றும், கடந்த 75 ஆண்டுகளில் காந்திக்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கச் செய்வது நம் நாட்டின் பொறுப்பு அல்லவா என்றும் பேசியிருந்தார்.

"மகாத்மா காந்தி உலகின் மிகப் பெரிய ஆன்மா. இந்த 75 ஆண்டுகளில், மகாத்மா காந்தியைப் பற்றி உலகிற்கு தெரிவிக்க வேண்டியது நம் பொறுப்பு அல்லவா? அவரைப் பற்றி யாருக்கும் தெரியாது. என்னை மன்னித்துவிடுங்கள், முதல் முறையாக உலகம் அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஆர்வம் கொண்டது 'காந்தி' படம் எடுக்கப்பட்டபோதுதான்" என்று பிரதமர் மோடி கூறினார்.

'காந்தி' படம் வருவதற்கு முன்பு வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி காந்தியின் புகழை உலகிற்குத் தெரியப்படுத்த எதுவும் செய்யவில்லை என்றும் மோடி குறை கூறினார். தொடர்ந்து, “மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை உலகம் அறிந்திருந்தால், காந்தி அவர்களை விட குறைந்தவர் அல்ல, அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் பயணம் செய்த பிறகு இதைச் சொல்கிறேன்…” என்றார்.

Rahul Gandhi jabs at Narendra Modi's degree after PM's claim on Mahatma Gandhi sgb

பிரதமரின் கருத்து குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 'காந்தி' திரைப்படம் வருவதற்கு முன்பே காந்தியின் புகழ் உலக அளவில் நிறுவப்பட்டுவிட்டது என்பதற்கு பல ஆதாரங்களை சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

மோடியின் பேச்சை விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை அழித்திருப்பது பிரதமர் மோடிதான் என்றும் வாரணாசி, டெல்லி, அகமதாபாத் நகரங்களில் உள்ள காந்திய நிறுவனங்களை அழித்தது மோடி அரசுதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

1982ஆம் ஆண்டு ரிச்சர்ட் அட்டன்பரோ எடுத்த 'காந்தி' திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தில் பிரிட்டிஷ் நடிகர் பென் கிங்ஸ்லி மகாத்மா காந்தியாக நடித்தார். உலகப்புகழ் பெற்ற அந்தப் படம் ஆஸ்கர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றது.

எங்கள் சிங்கம்! நெல்லையில் சண்டைச் சேவல் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி பேனர்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios