சென்னை மக்களே உஷார்.. 80 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச அதிக வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Chennai Rain Live Update : சென்னையில் மிக்ஜாம் புயல் நெருங்கி வரும் நிலையில், நாளை டிசம்பர் 5ம் தேதி அது கரையை கடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்றும் நாளையும் சென்னை மற்றும் தமிழகத்தின் சில பகுதிகளில் அதிக அளவில் சூறைக்காற்று வீசும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மணிக்கு 60-70 கிமீ வேகத்தில் இருந்து மணிக்கு 80 கிமீ வேகம் வரைசூறைக்காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று டிசம்பர் 4ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே போல தமிழகத்தின் ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களை பொறுத்தவரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று முழுவதும் மின்சார ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
விடிய விடிய வெளுத்துவாங்கிய மழை... சென்னையில் அதிகபட்ச மழைப்பதிவு எங்கே? முழு விவரம் இதோ
மேலும் மக்கள் பெரிய அளவில் வெளியே வருவதை தடுக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிர்வங்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கி உள்ளது. அதில் தங்களது ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் வண்ணம் அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளது.