Asianet News TamilAsianet News Tamil

விடிய விடிய வெளுத்துவாங்கிய மழை... சென்னையில் அதிகபட்ச மழைப்பதிவு எங்கே? முழு விவரம் இதோ

சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து கனமழை கொட்டி வரும் நிலையில், எந்தெந்த பகுதிகளில் அதிக மழைப்பொழிவு பதிவானது என்பதை பார்க்கலாம்.

Cyclone Michaung 24cm rainfall in chennai perungudi gan
Author
First Published Dec 4, 2023, 8:28 AM IST

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையிலும் அதனை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. கொட்டித்தீர்க்கும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டதால் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர்.

கனமழை காரணமாக சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த மழை இன்றும் தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளதால் சென்னைவாசிகள் கலக்கம் அடைந்துள்ளனர். சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையில் பெருங்குடியில் தான் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. அங்கு 24 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு அடுத்தபடியாக சென்னை மீனம்பாக்கத்தில் 20 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. இதேபோல் வளசரவாக்கத்தில் 19 சென்டிமீட்டர் மழையும், அண்ணாநகரில் 18.3 சென்டிமீட்டர் மழையும், கோடம்பாக்கத்தில் 18.2 சென்டிமீட்டர் மழையும் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. கனமழை காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... Cyclone Michaung Chennai :சென்னையை மிரள விடும் மிக்ஜாம்! சூறாவளி காற்றோடு இரவு முழுவதும் வெளுத்து வாங்கும் மழை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios