Asianet News TamilAsianet News Tamil

Cyclone Michaung Chennai :சென்னையை மிரள விடும் மிக்ஜாம்! சூறாவளி காற்றோடு இரவு முழுவதும் வெளுத்து வாங்கும் மழை

வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் சென்னை அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக நேற்று மாலையில் இருந்து இரவு முழுவதும் பலத்த மழையானது பெய்து வருகிறது. அதிகாலையில் சூறாவளி காற்றோடு மழை பெய்து வருவதால் பல இடங்களில் மரங்கள் கிழே விழுந்துள்ளது
 

Cyclonic winds and heavy rains are lashing Chennai due to Cyclone Michaung KAK
Author
First Published Dec 4, 2023, 6:14 AM IST

அச்சறுத்தும் புயல்

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் இந்த பருவ மழை காலத்தில் முதல் புயலானது தற்போது உருவாகியுள்ளது. இந்த புயலானது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதிகாலை தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை அடையும். அதன் பிறகு, 5 ஆம் தேதி அதிகாலையில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே புயலாக மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் கரையைக் கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு சார்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய ரயில்கள் மற்றும் பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Cyclonic winds and heavy rains are lashing Chennai due to Cyclone Michaung KAK

சூறாவளி காற்றோடு கொட்டித்தீர்க்கும் மழை

இந்த புயலின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை முதல் மழையானது விடாமல் கொட்டி வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக வாக ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்தனர். பல இடங்களில் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், நள்ளிரவில் இருந்து சூறாவளி காற்றோடு மழையானது பெய்து வருகிறது. எண்ணூர் துறைமுகத்தில் 75 கி.மீட்டர் வேகத்திலும், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

 

Cyclonic winds and heavy rains are lashing Chennai due to Cyclone Michaung KAKசென்னையில் அண்ணாநகர், அம்பத்தூர், பெரம்பூர், மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழையோடு சேர்ந்து காற்றும் வீசிவருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள் கீழே விழுந்துள்ளது. மேலும் பலத்த காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரமும் நிறுத்தப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள்

அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின்.. ஆடிப்போன அதிகாரிகள்.. திடீர் விசிட்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios