RM Veerappan Death : முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் 98 வயதில் காலமானார்!!
RM Veerappan: திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடல் நிலை பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்
ஆர்.எம். வீரப்பன் காலமானார்
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 97, அதிமுக உருவாக முக்கிய நபராக கருதப்படும் ஆர்.எம்.வீரப்பன்,1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார். மேலும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவுடன் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
வயது மூப்பு காரணமாக காலமானார்
சில ஆண்டுகளில்.ஜெயல்லிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இருந்து பிரிந்து வந்த இவர் பின்நாளில் எம்.ஜி.ஆர் கழகம் என்ற கட்சியை நிறுவினார். தற்போது வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து சென்னையிலுள்ள அப்பல்லோ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஆர்.எம். வீரப்பன் காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
- RIP RM Veerappan
- RM Veerappan
- RM Veerappan Death
- RM Veerappan Latest
- RM Veerappan death cause
- RM Veerappan death news
- RM Veerappan dies in Chennai
- RM Veerappan latest news
- RM Veerappan passed away
- RM Veerappan passes away
- RM veerappan death
- Senior Leader Veerappan
- admk
- dmk
- election
- jayalalitha
- mgr
- politics
- producer rm veerappan
- tamilnadu
- RM Veerappan in Tamil