மாண்டஸ் புயல் எதிரொலி... நாளை நடைபெற இருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைப்பு!!
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக நாளை நடைபெற இருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே மாண்டஸ் புயலின் வெளிவட்டப் பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் தொடங்கியுள்ளது. 14 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை கடந்து வருகிறது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் எதிரொலி... ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!!
இந்த நிலையில் நாளை நடைபெற இருந்த வனத்துறை தேர்வு ஒத்திவைத்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், தமிழ்நாடு வன சார்நிலைப் பணியில் அடங்கிய வனத்தொழில் பழகுநர் (தொகுதி VI) பதவி நியமனத்திற்காக நாளை (10.12.2022) நடைபெற உள்ள தேர்வுகள் மட்டும் மாண்டஸ் புயல் காரணமாக தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது.
இதையும் படிங்க: புயல் சூழலை சமாளிக்க அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது… முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்!!
இத்தேர்வுகள் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மாண்டஸ் புயல் காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும், டிப்ளமோ தேர்வுகளும் ஒத்திவைக்ப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.