மாண்டஸ் புயல் எதிரொலி... ஈசிஆர் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்!!
மாண்டஸ் புயல் காரணமாக ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் சென்னை அருகே 110 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 80 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 14 கிமீ வேகத்தில் மாண்டஸ் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்... அறிவித்தது மின்வாரியம்!!
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது 70 கி.மீ வேகத்தில் காற்றி வீசக்கூடும் என்று என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாகக் ஈ.சி.ஆர். சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பட்டன.
இதையும் படிங்க: தீவிரமடைந்த மாண்டஸ் புயல்... சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து!!
எந்தவொரு வாகனங்களையும் போலீசார் அனுமதிக்கவில்லை. மற்ற இடங்களில் வழக்கம் போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் மாண்டஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 3 மணி நேரத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.