மாண்டஸ் புயல் காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும்... அறிவித்தது மின்வாரியம்!!
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது இருக்கும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது இருக்கும் காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாண்டஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதையும் படிங்க: தீவிரமடைந்த மாண்டஸ் புயல்... சென்னையில் 13 விமானங்களின் சேவை ரத்து!!
குறிப்பாக சென்னை கடற்கரையை புயல் நெருங்கி வருவதால், பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மாமல்லபுரத்தில் இருந்து 135 கி.மீ. தென்கிழக்கு திசையிலும், சென்னையில் இருந்து 170 கி.மீ. தெற்கு, தென்கிழக்கு திசையிலும் மாண்டஸ் புயல் நிலைகொண்டுள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயலின் வேகம் 13 கிலோ மீட்டரில் இருந்து 14 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: மாண்டஸ் புயல் படத்தை எடுத்துஅனுப்பிய EOS-06 செயற்கைக்கோள்
இந்த நிலையில் மாண்டஸ் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகத்துக்கு ஏற்ப மின்சாரம் நிறுத்தப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. அதிகபட்சம் இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவித்து மின்வாரியம், புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து பணியில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.