வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புகைப்படத்தை இஸ்ரோ சமீபத்தில் அனுப்பிய இஓஎஸ்-06 செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புகைப்படத்தை இஸ்ரோ சமீபத்தில் அனுப்பிய இஓஎஸ்-06 செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது.
வடகிழக்கு பருவமழையில் 5வது சுற்று நடந்து வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி படிப்படியாக நகர்ந்து, தாழ்வுமண்டலமாகி,கடந்த 7ம் தேதி இரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மாண்டஸ் புயல் என்று பெயரிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து தெற்கே 260 கி.மீ தொலைவிலும், காரைக்காலுக்கு வடகிழக்கே 180கி.மீ தொலைவிலும் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் இன்று இரவு ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலைமையம்தெரிவித்துள்ளது. 12 கி.மீ வேகத்தில் நகர்ந்து வரும் மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 26ம் தேதி இஸ்ரோ சார்பில் பிஎஸ்எல்வி சி-54 அல்லது ஓசன்சாட் ராக்கெட் மூலம் விண்ணுக்கு இஓஎஸ்-06 செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இதனுடன் 8 நானோ செயற்கைக்கோள்களும் விண்ணில் செலுத்தப்பட்டன.
இஸ்ரோ அனுப்பிய இஓஎஸ்-06 செயற்கைக்கோள் விண்ணில் இருந்து மாண்டஸ் புயல் குறித்த புகைப்படத்தை படம் பிடித்து அனுப்பியுள்ளது. அந்தப் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டு அதி்ல் “ மாண்டஸ் புயல் குறித்த புகைப்படத்தை இஓஎஸ்-06 செயற்கைக்கோள் அனுப்பியுள்ளது. ஸ்காட்டர்மீட்டர் மூலம் காற்றின் வேகத்தின் புள்ளிவிவரங்கள் பெறப்பட்டு, மேகத்தின் அடுக்குகளை ஓசிஎம் அனுப்பியுள்ளது”எனத் தெரிவித்துள்ளது
கடந் நவம்பரில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இந்தியா அனுப்பிய ஓசன்சாட் செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்கும், நீர்வளங்களைக் கண்காணிக்கவும் செலுத்தப்பட்டது. இந்த ஓசன்சாட்-3 960கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள், 1360வாட்ஸில் இயங்கக்கூடியது. இந்த செயற்கைக்கோள் மூலம் கடலின் வெப்பநிலை, அதிவிரைவான புள்ளிவிவர சேகரித்தல் போன்றவற்றை செய்ய முடியும்
