டீ கடைக்குள் புகுந்த வேன்.. மகன் மற்றும் தாய் உள்பட மூவர் உடல் நசுங்கி பலி - ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரணை!
டீ கடைக்குள் இருந்த சிவகுமார் மற்றும் அவரது தயார் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மினி வேன் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து டீ கடையில் மோதியதில் மூன்று பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் கொசவப்பட்டி அருகே கோவையிலிருந்து மதுரை நோக்கி ஒரு மீன் வண்டி சென்றுள்ளது.
அப்போது குறுக்கே வந்த இருசக்கர வாகனத்தில் மோதி வண்டி எதிர்பாராத விதமாக டீ கடைக்குள் சென்று அதிவேகமாக மோதியுள்ளது. இதில் டீ கடைக்குள் இருந்த கள்ளிமந்தையம் பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும் அவரது தயார் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்துள்ளனர்.
மேலும் குறுக்கே வந்த இரு சக்கர வாகன ஓட்டியும் இந்த விபத்தில் இறந்துள்ளார். தற்போது அந்த வண்டியை இயக்கி வந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது. போக்கிலின் இயந்திரம் கொண்டு அந்த வேன், டீ கடைக்குள் இருந்து அகற்றப்பட்டது.
அதிவேகமாக வாகனத்தை இயக்குவதும், எல்லா பக்கமும் பார்க்காமல் வண்டியை இயக்குவதுமே பல விபத்துகளுக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.
தமிழ்நாடு தினம் நவ 1க்குப் பதிலாக ஜூலை 18க்கு மாற்றப்பட்டது ஏன்? பின்னணி என்ன?