பிக் பாஸ்சுக்கு பிறகும் தொடர்ந்த உறவு.. 15 பேரை ஏமாற்றிய விக்ரமன் - புகார்களை அடுக்கும் இளம் பெண் கிருபா!
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள போவதாகவும், அதற்கான அழைப்பு அவர்களிடமிருந்தே வந்துள்ளது என்றும் விக்ரமன் கூறினார்.
ஒரு செய்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்று திரும்பி அதன் மூலம் பெரிய அளவில் புகழ்பெற்ற ஒருவர்தான் விக்ரமன். தற்பொழுது விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் மீது பல குற்றச்சாட்டுகளை திடுக்கிடும் வகையில் முன் வைத்துள்ளார் கிருபா முனுசாமி என்ற பெண் அவர் வைத்துள்ள புகார்கள் பின்வருமாறு..
"கடந்த சில மாதங்களாக கடும் வேதனையையும், ஏமாற்றத்தையும் அனுபவித்த பிறகு பொதுவெளியில் இந்த விஷயத்தை பற்றி நான் தற்பொழுது எழுதுகிறேன். கடந்த 2013ம் ஆண்டு முதல் எனக்கு ஆர். விக்ரமன் அவர்களை தெரியும்.
"அந்த ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நான் சென்றபொழுது, அவரும் அதில் கலந்துகொள்ள வந்திருந்தார். இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நான் லண்டன் புறப்பட்டபொழுது என்னை அவராகவே முன்வந்து, வழி அனுப்பி வைக்க வந்தார்". "இதைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு அக்டோபர் மாதம் என் மீது காதல்கொள்ளும் எண்ணத்தோடு அவர் பேசத் தொடங்கினார்".
"அவர் பேசத் தொடங்கிய இரண்டு நாட்களில், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொள்ள போவதாகவும், அதற்கான அழைப்பு அவர்களிடமிருந்தே வந்துள்ளது என்றும் அவர் கூறினார். ஆனால் அந்த கட்சியில் அவர் தான் முயன்று உள்ளே நுழைந்தார் என்பது எனக்கு அதற்கு பிறகு தான் தெரியவந்தது".
"அன்று தொடங்கி என்னிடம் அவர் தனது அரசியல் பயணத்திற்காக பல உதவிகளை தொடர்ச்சியாக கேட்டு வந்தார். அவர் என்னிடம் அடிக்கடி பணம் கேட்பது குறித்து நான் விவாதிக்கும் பொழுதெல்லாம், சாதிய உணர்வோடு அவர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டார். இதனால் கோபமுற்று நான் அவரிடமிருந்து விலகிய போது, அவர் அழுது, கெஞ்சி, நல்லவரைப் போல நடந்து கொண்டு என்னை சமாதானப்படுத்துவார்"
"சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கு பண ரீதியாக நான் உதவி செய்வதை நிறுத்தினேன். மேலும் நான் கொடுத்த தொகையை திருப்பி கேட்டபொழுது 2022ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் அந்த பணங்களை எல்லாம் கொடுத்து விடுகிறேன் என்று கூறியவர், ஒரு கட்டத்தில் என்னை பிளாக் செய்தார். சுமார் மூன்று மாதங்கள் முயன்று அவரிடம் பேசினேன், சரியாக அவர் பிக் பாஸுக்குள் நுழைவதற்கு சில காலங்களுக்கு முன்பு என்னிடம் கடுமையான நடத்துக்காக என்னிடம் மன்னிப்பு கேட்க, மீண்டும் என்னுடன் இணைந்தார். நானும் அவரை மன்னித்து ஏற்றுக் கொண்டேன், அவர் பலமுறை பிக் பாஸ் குறித்து என்னிடம் பேசியுள்ளார்".
"பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் அவர் என்னோடு உறவில் இருந்தார், அந்த நிலையில் தான் அவர் மேனேஜர் என்று அழைக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு இருந்த தொடர்பு எனக்கு தெரியவந்தது. அவர்கள் இருவரையும் ஒரு கான்பிரன்ஸ் காலில் இணைத்து நான் பேசியபொழுது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருப்பதை விக்ரமனே ஒப்புக்கொண்டார்".
"இதுவரை சுமார் 15 பேரை இதுபோல அவர் ஏமாற்றி இருக்கிறார் என்றும் எனக்கு தெரிய வந்தது. இந்நிலையில் அவர் மீது நான் போலீசில் புகார் அளிக்க போகின்றேன் என்று கூறியதும் என்னிடம் தொடர்ச்சியாக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் தற்பொழுது அவர் மீது 20 பக்க புகார் அறிக்கை ஒன்றை நான் தாக்கல் செய்திருக்கிறேன்", என்று இன்னும் பல விஷயங்கள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த பெண் பகிர்ந்துள்ளார்.
சென்னை- நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவைக்கு முன்னுரிமை.. வேகமெடுக்கும் பணிகள்..!