Asianet News TamilAsianet News Tamil

தமிழ்நாடு தினம் நவ 1க்குப் பதிலாக ஜூலை 18க்கு மாற்றப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

தமிழ்நாடு தினம் நவம்பர் 1ஆம் தேதிக்குப் பதிலாக ஜூலை 18ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏன்? இந்த மாற்றம் எப்போது நடந்தது? ஏன் மாற்றப்பட்டது என்ற வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.

Why was Tamil Nadu Day changed from 1st November to 18th July?
Author
First Published Jul 16, 2023, 4:42 PM IST

இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலை முன்னால் இருந்தே பல பகுதிகளைச் சேரந்தவர்கள் மாகாணங்களை மொழியின் அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்து வந்தனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் முதல் முதலில் 1935ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் தனி மாகாணமாக உருவானது. அதைத் தொடர்ந்து நாட்டின் மற்ற பகுதிகளில் இருந்தும் மொழிவாரி மாகாணம் தொடர்பான கோரிக்கை எழுந்து வலுப்பெற்றது.

தமிழகத்தைச் சேர்ந்த பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி, நேசமணி, சங்கரலிங்கனார் தலைவர்கள் மாகாணங்களை மொழி அடிப்படையில் பிரிப்பது குறித்து போராட்டங்கள் நடத்தினர். இவர்களது கோரிக்கையை அப்போதைய எதிர்தரப்பு தலைவர்களான ராஜாஜி, கோல்வாக்கர் போன்றோர் எதிர்த்தனர். ஆனால், அப்போது பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு மொழிவாரி மாகாணங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்.

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ளும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

Why was Tamil Nadu Day changed from 1st November to 18th July?

அதன்படி, 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி அப்போது இந்தியாவிற்குள் அடங்கியிருந்த மாகாணங்கள் அனைத்தும் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டு 16 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன. மெட்ராஸ் மாகாணமாக இருந்த பகுதிகள் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளின் அடிப்படையில் நான்கு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன.

பிரிக்கப்பட்ட மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் வைக்க வலியுறுத்தி உண்ணாவிரதம் நடத்திய விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் போராட்டத்தின்போதே உயிர் நீத்தார். 1967ஆம் ஆண்டு முதல்வரான பேரறிஞர் அண்ணா ஜூலை 18ஆம் தேதி மெட்ராஸ் மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். அது சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா அதே ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1969ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் நடைமுறைக்கு வந்தது.

சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை! ம.பி. பாஜக தலைவரின் மகன் உள்பட 4 பேர் மீது வழக்கு!

Why was Tamil Nadu Day changed from 1st November to 18th July?

தமிழ்நாடு தவிர, மற்ற மாநிலங்கள் அனைத்தும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பர் 1ஆம் தேதியில் மாநில நாளைக் கொண்டாடி வருகின்றன. அதைப் பின்பற்றி நவம்பர் 1ஆம் தேதியையே தமிழ்நாடு நாளாகக் கொண்டாட எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை திமுக, திராவிடர் கழகம், திராவிடர் இயக்க தமிழர் பேரவை போன்ற எதிர்த்தன.

2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், அக்டோபர் 30ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்யும்  தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நாளான ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார். அதன்படி கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படுகிறது.

சென்னை மணலி விரைவு சாலையில் திடீரென்று தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

Follow Us:
Download App:
  • android
  • ios