Asianet News TamilAsianet News Tamil

எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ளும்: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

பெங்களூருவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டத்தில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் கலந்துகொள்ள உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

AAP Says "Will Join Opposition Meet" After Congress Backs Ordinance Fight
Author
First Published Jul 16, 2023, 5:52 PM IST

பெங்களூருவில் ஜூலை 17,18ஆம் தேதிகளில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியும் கலந்துகொள்ள உள்ளது என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

டெல்லியில் மாநில அரசைவிட ஆளுநருக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் மத்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குரிய அவசரச் சட்டத்துக்கு எதிராக போராடிவரும் ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்க முன்வந்துள்ளதன் எதிரொலியாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெல்லியில் பாஜகவை எதிர்த்து உறுதியாகப் போராடிவரும் ஆம் ஆத்மி கட்சி பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மத்திய அரசு கொண்டுவந்த டெல்லி அவசரச் சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்காமல் இருப்பதில் அதிருப்தி அடைந்த ஆம் ஆத்மி கட்சி, எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இணைவதற்குத் தயங்கியது. இந்நிலையில் அவர்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் செவிசாய்த்துள்ளதால் அக்கட்சி பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு தினம் நவ 1க்குப் பதிலாக ஜூலை 18க்கு மாற்றப்பட்டது ஏன்? பின்னணி என்ன?

AAP Says "Will Join Opposition Meet" After Congress Backs Ordinance Fight

2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம், பீகாரின் பாட்னாவில் ஜூன் 23 அன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து இரண்டாவது கூட்டம் சிம்லாவில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால், பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க 24 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

24 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஜூலை 17ஆம் தேதி பெங்களூருவில் சந்தித்துக்கொள்கின்றனர். முறையான கூட்டம் அடுத்த நாள் நடைபெற உள்ளது. முதல் நாளில் பேச்சுவார்த்தை முடிந்ததும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைவர்களுக்கு இரவு விருந்து அளிக்கிறார் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவராக உள்ள சோனியா காந்தி இதில் கலந்துகொள்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிக்கலான பிரச்சினைகளை எளிதில் தீர்க்கப்படுவதற்கு அவரது இருப்பு உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

பெங்களூரு கூட்டத்தில் பாட்னா கூட்டத்தில் கலந்துகொள்ளாத எட்டு புதிய கட்சிகள் பெங்களூரு கூட்டத்தில் பங்கேற்க உள்ளன. தமிழ்நாட்டில் இருந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் (ம.தி.மு.க), கொங்கு தேச மக்கள் கட்சி (கொ.தே.ம.க.), விடுதலை சிறுத்தைகள் கட்சி (வி.சி.க), புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி (பு.சோ.க), அகில இந்திய பார்வர்டு பிளாக், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரள காங்கிரஸ் (ஜோசப்) மற்றும் கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதிதாக அழைக்கப்பட்டுள்ளன.

5.4 வினாடியில் 100 கி.மீ வேகத்தில் பறக்கும் பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 கார்! விலை எவ்வளவு தெரியுமா?

AAP Says "Will Join Opposition Meet" After Congress Backs Ordinance Fight

எதிர்க்கட்சிகளின் இந்தக் கூட்டத்தை முறியடிக்கும் நோக்கில், அதே நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் கூட்டத்திற்கும் பாஜக அழைப்பு விடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் கட்சியின் பலத்தைக் காட்டும் வகையில் இந்தக் கூட்டம் திட்டமிடப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

வளர்ந்துவரும் நாடுகளில் இந்தியா தான் பெஸ்டு! கேபிடல் குழுமத்தின் கட்டுரையைப் பகிர்ந்த பிரதமர் மோடி

Follow Us:
Download App:
  • android
  • ios