ஆளுநரின் செயல்பாட்டில் குந்தகம் விளைவிப்பது, அவரது பணியை செய்ய விடாமல் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு  புகார்களை அடிப்படையாக கொண்டு நக்கீரன் கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கோபால் மீது  இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 இன் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

ஐபிசி பிரிவு 124 படி,

இந்திய குடியரசுத்தலைவர், ஆளுநரை பணி செய்ய தடுத்தாலோ, பணிக்கு இடையூறு செய்தாலோ 124 பிரிவின் கீழ், வழக்குபதிவு செய்யப்படும் 

தண்டனை

ஜாமீனில் வெளிவர முடியாத 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ன செய்யலாம்..?

நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, வழக்கை ரத்து செய்ய கோர முடியும்.

நக்கீரனுக்கு அதரவு
  
கருத்து  சுதந்திரம் பத்திரிக்கை  சுதந்திரம் எங்கே சென்றது..? கட்சிக்கு ஒரு நீதியா.? என திமுக தலைவர் ஸ்டாலின் கண்டன குரல் எழுப்பி உள்ளார். விடுதி சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன், முத்தரசன், மதிமுக  பொதுச்செயலாளர்  உள்ளிட்ட அனைவரும் நக்கீரன் கோபாலுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.