தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல் - இன்று நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Nirmala Sitharaman : கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தனது 71வது வயதில் மறைந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் தொடர்ச்சியாக நேரில் வந்து தங்களுடைய இரங்கல்களை மற்றும் இறுதி மரியாதையை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செலுத்தி வருகின்றனர்.

Finance Minister Nirmala Sitharaman will pay her last respect to vijayakanth in theevuthidal ans

இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் மத்திய அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் நேரில் வந்து தனது இறுதி மரியாதையை கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செலுத்தவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தேமுதிக தலைவரும், முன்னாள் நடிகர் சங்க தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடந்து சில வருடங்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. 

இதனையடுத்து சில வாரங்களுக்கு முன்பு அவருடைய உடல்நிலை மிகவும் மோசமானது, அதன் பிறகு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர் சில தினங்களுக்கு முன்பு ஒரு பொதுக்கூட்டத்தில் பங்கேற்றதும் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அவருக்கு மீண்டும் உடல் நலம் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்றும் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது. 

பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்ட கேப்டன் விஜயகாந்தின் உடல்!

இந்த சூழ்நிலையில் நிமோனியா காரணமாக நேற்று டிசம்பர் 28ஆம் தேதி காலை சுமார் 6.15 மணியளவில் அவருடைய உயிர் பிரிந்தது. முதலில் அவருடைய உடல் தேமுதிக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பொதுமக்களின் அஞ்சலிக்காக தீவுத்திடலில் அவருடைய பூதவுடல் வைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களும், திரை துறையினர் பலரும் நேரில் வந்து கண்ணீர் மல்க தங்களது அஞ்சலிகளையும் இறுதி மரியாதையையும் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு செலுத்தி சென்று வருகின்றனர். 

தீவுத்திடலில் கேப்டன் விஜயகாந்த் உடல்.. அஞ்சலி செலுத்த திரண்ட பொதுமக்கள்.. சென்னையில் போக்குவரத்து மாற்றம்.!

இந்த சூழ்நிலையில் இன்று 29.12.2023 வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 12.30 மணி அளவில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள் மறைந்த தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி மரியாதை செய்ய தீவுத்திடல் பகுதிக்கு வருகை தர உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios