பல்வேறு மாவட்டங்களில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத்திடலில் கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தேமுதிக தலைவரும், பிரபல திரைப்பட நடிகரும், முன்னாள் சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். அவரது திடீர் மறைவு தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது உடல் சென்னை சாலி கிராமத்திலிருந்து தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

இதையும் படிங்க;- கேப்டனுக்கு மெரினா பீச்சுல இடம் கொடுக்கனும்! விஜயகாந்த் ரசிகர்கள் வைத்த கோரிக்கை... ஏற்குமா அரசு?

பொதுமக்கள், கட்சியினர், சினிமா பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வந்ததனர். பல்வேறு மாவட்டங்களில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தேமுதிக அலுவலகத்தில் இருந்து சென்னை தீவுத் திடலில் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான இரவு முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பல்லாயிரக்கணக்கானோர் சென்னை தீவுத்திடலில் குவிந்துள்ளனர்.

இதையும் படிங்க;- சினிமாவில் இருந்து அரசியல் அளுமைகளாக மாறி, டிசம்பரில் மறைந்த தலைவர்கள்.. யார் யார்?

தீவுத்திடலில் இன்று மதியம் 1 மணிவரை விஜயகாந்த் வைக்கப்பட்ட உள்ளது. பின்னர் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகம் நோக்கி எடுத்து செல்லப்பட்டு இன்று மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.