சென்னையில் மீண்டும் ED ரெய்டு... இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அமலாக்கத்துறை சோதனை
அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக திமுக அமைச்சர்களான செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் வீடுகளில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மணல் குவாரி மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் தொடர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் இன்று காலை முதல் சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் தலைவராக ஶ்ரீநிவாசன் உள்ளார். இந்த நிறுவனம் தான் சிஎஸ்கே அணியை வழிநடத்தி வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளிலும் கிரிக்கெட் அணியை ஏலம் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் அந்நிய செலவாணி மேலாண்மை சட்டத்தை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறையின் சென்னை பட்டினம்பாக்கம் பகுதியில் உள்ள அலுவலகத்தில் காலை முதல் சோதனை நடத்தினர். சோதனையை முடித்துக்கொண்டு அதிகாரிகள் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்