சென்னையில் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

சென்னையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். அமைச்சர் கே.என். நேருவின் சகோதருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெறுகிறது.

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரான என். ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான TVH கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. அவருக்குத் தொடர்புடைய பிற இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.

கே.என். நேருவின் மற்றொரு சகோதரர் மணிவண்ணன், சகோதரி உமா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள்.

Scroll to load tweet…

ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர், பெசன்ட் நகர் முதலிய 10 க்கும் மேற்பட்ட இடங்களில் ரவிச்சந்திரனின் கட்டுமான நிறுவனத்துடன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது. கே.என். நேருவின் மகனும் பெரம்பலூர் தொகுதி எம்.பி.யுமான அருண் நேருவுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத்துறை இந்தச் சோதனை மேற்கொண்டிருக்கிறது எனக் கூறப்படுகிறது. சோதனை முடிந்த பிறகு அமலாக்கத்துறை அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடும். அதில் இந்தச் சோதனையின்போது கைப்பற்றிய பணம் மற்றும் ஆவணங்கள் தொடர்பான முழு விவரமும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் தெருவுக்குத் தெரு AI கேமரா பொருத்தும் பணி தீவிரம்!