Asianet News TamilAsianet News Tamil

இழுபறிக்கு முற்றுப்புள்ளி... மயிலாடுதுறையில் காங்கிரஸ் வேட்பாளர் பெயர் அறிவிப்பு

மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறையில் ஆர். சுதா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

End of the tug-of-war... Congress candidate for Mayiladuthurai constituency announced sgb
Author
First Published Mar 26, 2024, 10:25 PM IST

காங்கிரஸ் கட்சி சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் ஆர்.சீதா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் பெயர் முடிவாகி இருக்கிறது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். முக்கியத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பயணித்து தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கின்றனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியில் மட்டும் மயிலாடுதுறை வேட்பாளர் யார் என்று தெரியாத நிலை இருந்தது வந்தது. ஏற்கெனவே 9 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், மயிலாடுதுறை தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாமல் இருந்தது. கட்சிக்குள் பலரும் அந்தத் தொகுதியில் போட்டியிட விரும்பம் தெரிவித்ததால் முடிவு எடுப்பதில் இழுபறி நீடித்தது.

நீட் ரத்து மனுக்களை குப்பைத் தொட்டியில் போட்டவர்களா அதை ரத்து செய்வார்கள்?: எடப்பாடி பழனிச்சாமி

End of the tug-of-war... Congress candidate for Mayiladuthurai constituency announced sgb

இந்நிலையில், மயிலாடுதுறையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பெயரை காங்கிரஸ் கட்சி இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவித்துள்ளது. அதன்படி, மயிலாடுதுறையில் ஆர். சுதா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

நாளையுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகசாம் முடிவடைய உள்ளது. இதனால், காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா நாளை மயிலாடுதுறை தேர்தல் நடத்தும் அதிகாரியைச் சந்தித்து தனது வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விதவிதமாக பெண் வேடமிட்டு வழிபாடு செய்த ஆண்கள்! கேரளக் கோவிலில் வினோத வழிபாடு!

Follow Us:
Download App:
  • android
  • ios