நீட் ரத்து மனுக்களை குப்பைத் தொட்டியில் போட்டவர்களா அதை ரத்து செய்வார்கள்?: எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Will those who put NEET cancellation petitions in the dustbin cancel it?: Edappadi Palanisami sgb

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் கையெழுத்து இயக்க மனுக்களை இளைஞரணி மாநாட்டில் குப்பைத் தொட்டியில் போட்ட திமுகவா அதை ரத்து செய்வார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். முக்கியத் தலைவர்கள் மாநிலம் முழுவதும் பயணித்து தங்கள் வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்து வாக்கு சேகரிக்கின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி திமுக மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

நீட் தேர்வு ரத்து குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்துக்கு இபிஎஸ் பதில் அளித்தார். "நீட் ரத்துக்காக திமுக எதையும் செய்யவில்லை. நீட்டை ரத்து செய்ய அழுத்தம் கொடுக்கத் தெரியவில்லை. நீட் ரத்து கையெழுத்து இயக்க மனுக்களை இளைஞரணி மாநாட்டில் குப்பைத் தொட்டியில் போட்டவர்களா அதை ரத்து செய்வார்கள்?" என்று அவர் கூறினார்.

விதவிதமாக பெண் வேடமிட்டு வழிபாடு செய்த ஆண்கள்! கேரளக் கோவிலில் வினோத வழிபாடு!

அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள்தான் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஒன்றுதான் அதிமுகவின் லட்சியம் என்றும் இபிஎஸ் நம்பிக்கை தெரிரவித்தார்.

Will those who put NEET cancellation petitions in the dustbin cancel it?: Edappadi Palanisami sgb

மேலும், "ஒரு புயல்தான் வந்தது அதற்கே திமுக ஆட்சி ஆடிப்போய்விட்டது. கடந்த கால அதிமுக ஆட்சியில் எத்தனையோ இயற்கைப் பேரிடர்கள் வந்தன. அப்போது நாம் திறமையாக செயல்பட்டோம். டிசம்பர் மாதம் பெய்த மழையின்போது என்னால் முடிந்த நிவாரண உதவிகளை வழங்கினேன். டிசம்பர் மாதம் சென்னை வானிலை ஆய்வு மையம் மழை வரும் என அறிக்கைவிட்டது. ஆனால் திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ள காலத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லாமல், டெல்லியில் கூட்டணி பேசச் சென்றுவிட்டார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், பழுதான வாகனங்களுக்கும் திமுக அரசு இழப்பீடு தரவில்லை என்றும் கூறினார்.

அதிமுக - பாஜக இடையே கள்ளக்கூட்டணி இருப்பதாக திமுகவினர் குற்றம் சாட்டுவதற்கு பதில் அளித்த ஈபிஎஸ், மோடி - மு.க.ஸ்டாலின் இருவரும் சந்தித்தபோது எடுத்த படங்களைக் காண்பித்து, யார் கள்ளக்கூட்டணி வைத்துள்ளனர் என்று கேள்வி எழுப்பினார்.

உதயநிதி ஸ்டாலின் செங்கலைக் காட்டுவதை ஈபிஎஸ் குறைகூறினார். அதற்கு உதயநிதி, மோடியுடன் ஈபிஎஸ் பல்லைக்காட்டிச் சிரிக்கும் படத்தைக் காட்டி, "நானாவது செங்கலைக் காட்டினேன். பழனிசாமி பல்லைக்காட்டுகிறார்" என்று பேசினார். இதற்கு தூத்துக்குடியில் பதில் சொன்ன இபிஎஸ், "நான் சிரித்தால் பல் தெரிகிறது என்று உதயநிதி ஸ்டாலின் சொல்கிறார். 2019ல் மதுரையில் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். அப்போது நானும் அவருடன் அமர்ந்திருந்தேன். அதை உதயநிதி ஸ்டாலின் கொச்சைப்படுத்தி, பல்லைக் காட்டிக்கொண்டிருகிறார் என்று சொல்கிறார்" என்று குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி பதிலுக்கு உதயநிதி ஸ்டாலினும், மோடியும் இருக்கும் படத்தைக் காட்டி, உதயநிதி ஸ்டாலினும் பல்லைத்தான் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று சொல்லி, "நீங்கள் சிரித்தால் சரி, நாங்கள் சிரித்தால் தவறா? நான் சிரிப்பது தவறா? ஸ்டாலினிடம் சிரிப்பே வராது" எனவும் ஆவேசமாகப் பேசினார்.

சூரிய காந்தப்புல மாற்றத்தால் பூமியைத் தாக்கும் வலிமையான புவி காந்தப் புயல்! விளைவு என்ன?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios