சூரிய காந்தப்புல மாற்றத்தால் பூமியைத் தாக்கும் வலிமையான புவி காந்தப் புயல்! விளைவு என்ன?

ஒவ்வொரு 11 வருடங்களுக்கும், சூரியனின் காந்தப்புலம் மாறுகிறது. அதன் வடக்கு மற்றும் தென் துருவங்கள் நிலைகளை மாற்றுகின்றன. இந்தச் சுழற்சியின்போது, சூரிய செயல்பாடு மாறுகிறது. இதுபோன்ற காலங்களில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட புவி காந்தப் புயல்கள் வருடத்திற்கு சில முறை பூமியைத் தாக்கக்கூடும் என்று லாஷ் விளக்குகிறார்.

Strongest Geomagnetic Storm In 6 Years Hits Earth: All You Need To Know sgb

பூமி, ஞாயிற்றுக்கிழமை, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் மிக சக்திவாய்ந்த சூரிய புயலால் தாக்கப்பட்டது. இது பூமியின் காந்தப்புலத்தில் ஒரு பெரிய இடையூறு ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்காவின் கொலராடோவின் போல்டரில் உள்ள NOAA விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையத்தின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மார்ச் 26 அன்று, NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், புவிகாந்தப் புயலைச் சுற்றியுள்ள நிலைமைகள் பலவீனமடையும் வரை ​புயல் கண்காணிப்பைத் தொடர்வோம் எனக் கூறியுள்ளனர்.

அந்த பதிவில், “G3 எனப்படும் (மிதமான) புவி காந்த புயல் கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது. இருப்பினும், நிலைமைகள் பலவீனமடைவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன. புயலின் தாக்கம் முடியும் வரை G3 கண்காணிப்பு தொடரும். பின்னர் G1 (மைனர்) புயல் அளவுகளில் பாதிப்புகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது." என்று கூறப்பட்டுள்ளது.

காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்; முதல் முறை குரல் கொடுத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்!

விண்வெளி வானிலை முன்னறிவிப்பாளர்கள் சூரிய ஒளியின் வெடிப்பு கிரகத்தின் ரேடியோ பரிமாற்றங்களில் தலையிடக்கூடும் என்றும் கூறியுள்ளனர். NOAA இன் விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மையம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், பொதுமக்கள் கவலைப்படத் தேவையில்லை எனக் கூறியிருந்தது.

புவி காந்த புயல் குறித்து முன்னறிவிப்பை வெளியிட்ட, வானிலை முன்னறிவிப்பு மையம், “23/0133 UTC இல் காணப்பட்ட X1.1 ஒரு புவி காந்தப் புயல் மார்ச் 24 முதல் மார்ச் 25க்க்குள் பூமிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 24ஆம் தேதி G2 (மிதமான) புயல்கள் மற்றும் மார்ச் 25 இல் G3 (வலுவான) புயல்கள் ஏற்படக்கூடும்" என்று  தெரிவித்திருந்தது.

தொலைதூர போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரங்களுடன் தொடர்புகொள்ள முயற்சிக்கும் விமானங்களின் உயர் அதிர்வெண் ரேடியோ பரிமாற்றங்களில் புயல் குறுக்கிடக்கூடும் என்றும் அந்த மையத்தைச் சேர்ந்த ஜோனாதன் லாஷ் தெரிவித்தார். இருப்பினும், வணிக விமானங்கள் செயற்கைக்கோள் பரிமாற்றத்தை பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு 11 வருடங்களுக்கும், சூரியனின் காந்தப்புலம் மாறுகிறது. அதன் வடக்கு மற்றும் தென் துருவங்கள் நிலைகளை மாற்றுகின்றன. இந்தச் சுழற்சியின்போது, சூரிய செயல்பாடு மாறுகிறது. இதுபோன்ற காலங்களில், ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட புவி காந்தப் புயல்கள் வருடத்திற்கு சில முறை பூமியைத் தாக்கக்கூடும் என்று லாஷ் விளக்குகிறார்.

மீண்டும் பூமிக்குத் திரும்பி வந்த பிஎஸ்எல்வி போயம்-3! இன்னொரு மைல்கல்லை எட்டிய இஸ்ரோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios