திருநெல்வேலியில் உள்ள டாடா பவர் சூரிய மின் உற்பத்தி ஆலையில் பெண்கள் தயாரிக்கும் சோலார் பேனல்கள் மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்திட்டம் தமிழ்நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு மலிவான மின்சாரத்தையும் வழங்குகிறது.

தமிழ்நாட்டின் துடிப்பான நகரமான திருநெல்வேலியில், டாடா பவரின் சூரிய மின் உற்பத்தி ஆலையில் பெண்களால் தயாரிக்கப்பட்ட சோலார் பேனல்கள் மும்பைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இது இந்தியாவின் வேகமாக விரிவடைந்து வரும் பசுமை எரிசக்தித் துறையின் வீச்சைக் காட்டுகிறது.

நெல்லையில் உள்ள டாடா ஆலையில் பணிபுரியும் பணியாளர்களில் 80% பேர் சாதாரண பின்னணியைச் சேர்ந்த பெண்கள். 4.3 GW சூரிய மின்சக்தி உற்பத்தி தொகுதிகள் இந்த சாமானிய பெண்களின் மேற்பார்வையில் இயங்குகிறது. இந்த ஆலையிலிருந்து வரும் சூரிய மின்சக்தி தொகுதிகள் மகாராஷ்டிர அரசின் சூரிய மின்சக்தி திட்டத்திற்காக வழங்கப்படுகின்றன. இத்திட்டம் மூலம் அந்த மாநில அரசு விவசாயத்திற்கு மலிவான சூரிய மின்சக்தியை வழங்குகிறது.

"இது இரண்டு அரசாங்கத்திற்கும் நன்மை தருகிறது. தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு மலிவான சூரிய மின்சக்தியை வழங்கவும் முடிகிறது" என்று டாடா பவர் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

ஸ்மார்ட் முதலீடுக்கு சூப்பர் போஸ்ட் ஆபிஸ் திட்டம்! 3 மடங்கு வருமானம் நிச்சயம்!

டாடாவின் TPREL இன் கீழ் உள்ள TP சோலார் லிமிடெட் 300 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி தொகுதிகளை வழங்குவதற்காக மகாராஷ்டிர அரசின் மகாஜென்கோவுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் மதிப்பு தோராயமாக ரூ.455 கோடி.

திருநெல்வேலி மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள சாதாரண பின்னணி கொண்ட பெண்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். ஆனால், இந்தப் பெண்களுக்கு வழங்கப்படும் மாதச் சம்பளம் எவ்வளவு என்று டாடா தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், பி.இ., டிப்ளமோ, பி.எஸ்சி பட்டம் பெற்ற பெண்கள் பணியில் உள்ளனர். அவர்கள் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் மூன்று ஷிப்டுகளில் வேலை செய்கிறார்கள். காலை 6 முதல் மதியம் 2 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை என 3 ஷிப்டுகள் உள்ளன.

இந்த ஆலையை நிறுவ TPREL கிட்டத்தட்ட ரூ.4,300 கோடியை முதலீடு செய்துள்ளது. மேம்பட்ட ரோபோ அமைப்புகள், AI தொழில்நுட்பத்தைக் கையாளும் பணிகளிலும் பெண் ஆபரேட்டர்கள் சிறந்து விளங்குகிறார்கள். அதிநவீன இயந்திரங்கள், AI மற்றும் ரோபாட்டிக்ஸ் ஆகியவற்றைக் கையாள்வதில் நிபுணத்துவம் பெற ஆறு வார பயிற்சித் திட்டமும் வழங்கப்படுகிறது என டாடா அதிகாரி ஒருவர் கூறுகிறார்.

AI மற்றும் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் சிக்கலான அமைப்புகளை நுணுக்கமாக இயக்கவும் பராமரிக்கவும் உதவுகின்றன. பெண் ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ வேன்கள், இரவு நேர போக்குவரத்து ஏற்பாடுகள் உள்ளிட்ட விரிவான வசதிகளை டாடா அளிக்கிறது.

உங்க ரேஷன் கார்டு காலாவதி ஆகாமல் இருக்க உடனே இதைச் செய்யுங்க!